WhatsApp: வேற லெவல் அப்டேட்டா இருக்கே! செம குஷியில் வாட்ஸ் அப் பயனர்கள்.. விரைவில் அறிமுகமாகும் வசதி!
ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்களில் வாட்சாப் தளத்தைப் பயன்படுத்தினாலும் அவற்றுள் ஒன்று கூட ஸ்மார்ட்ஃபோனாக இருக்க முடியாது. இந்த நிலைமையை விரைவில் மாற்றவுள்ளது வாட்சாப் நிறுவனம்.
பல டிவைஸ்களில் வாட்சாப் செயலியைப் பயன்படுத்தும் சிறப்பம்சம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்களில் வாட்சாப் தளத்தைப் பயன்படுத்தினாலும் அவற்றுள் ஒன்று கூட ஸ்மார்ட்ஃபோனாக இருக்க முடியாது. இந்த நிலைமையை விரைவில் மாற்றவுள்ளது வாட்சாப் நிறுவனம்.
வாட்சாப் குறித்த தகவல்களை வெளியிடும் WABetaInfo செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், வாட்சாப் தற்போது புதிதாக கம்பேனியன் மோட் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 2.22.15.1 மென்பொருளுக்கு வழங்கப்பட்டுள்ள வாட்சாப் பீட்டா செயலியின் இது கொடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கம்பேனியன் மோட் மூலமாக உங்கள் வாட்சாப் அக்கவுண்டிற்கு இரண்டாவது மொபைலை சேர்த்துக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, முதன்மையாக வாட்சாப் அக்கவுண்ட் பயன்படுத்தும் ஃபோனில் இணைய வசதி இல்லாமலே இரண்டாவது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தலாம் என்பது இதில் கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு சிறப்பம்சம்.
கணினியில் வாட்சாப் பயன்படுத்தும் அதே வழிமுறையைப் பயன்படுத்தி இந்த சிறப்பம்சம் வேலை செய்கிறது. மேலும், மொத்த சாட்களும் இரண்டாவது ஸ்மார்ட்ஃபோனுக்குப் பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யப்படும் எனவும், உங்கள் வாட்சாப் வெப் தளத்தைப் பயன்படுத்தும் போது ஏற்படும் சிறிய நேர தாமதம் இதிலும் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
📝 WhatsApp beta for Android 2.22.15.13: what's new?
— WABetaInfo (@WABetaInfo) July 6, 2022
WhatsApp is working on syncing chats across mobile devices, for a future update!https://t.co/VPKxC0mnn3
இந்த சிறப்பம்சத்தைச் சமீபத்தில் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 2.22.15.13 மென்பொருளில் இயங்கும் வாட்சாப் பீட்டா செயலியில் கண்டறிந்துள்ளனர். இந்த சிறப்பம்சத்தை வாட்சாப் நிறுவனம் வெளியிடுமா என்பது தெரியவில்லை. எனினும், வாட்சாப் சார்பில் இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுவதைத் தொழில்நுட்ப நிபுணர்கள் பலரும் வரவேற்கின்றனர். தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன்களின் வாட்சாப் பீட்டா செயலிகளில் செயல்படுத்திய பிறகு, எதிர்காலத்தில் அனைவருக்கும் கிடைக்குமாறு வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்