Twitter Character Limit : ட்விட்டரில் 280 லிருந்து உயரும் வார்த்தை எண்ணிக்கை! - எலான் மஸ்க் சொன்ன ஹேப்பி நியூஸ்
Twitter Character Limit : ட்விட்டரில் அனுமதிக்கப்பட்ட வார்த்தை எண்ணிக்கை அதிகரிப்பா?
Twitter Character Limit :ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்று பிறகு பல மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில், ட்விட்டரில் தற்போது உள்ள 280 வார்த்தைகள் உச்ச வரம்பு விரைவில் 4 ஆயிரமாக மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் ‘ஆம்’ என்று பதிலளித்துள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் (Tesla and SpaceX CEO) முதன்மை செயல் தலைவர் எலான் மஸ்க் ( Elon Musk) ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பின்னர் நிர்வாக குழுவில் இணைந்தார். அதன் பிறகு ட்விட்டர் மாற்றங்களைக் கண்டது. ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு மாத கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டது. ட்விட்டரில் எடிட் பட்டன் வசதி உள்ளிட்டவற்றிற்கு எலான் மஸ்க் கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். ட்விட்டரில் அதிக வார்த்தைகளின் எண்ணிக்கை வரம்பு உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனம் வரும் திங்கள் முதல் ட்விட்டர் ப்ளூவை மறுதொடக்கம் செய்கிறது. குறிப்பாக ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு அதிக செலவில் ட்விட்டர் ப்ளூவை வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சந்தா சேவை இதர பயனர்களுக்கு மாதத்திற்கு $8 அமெரிக்க டாலர் மட்டுமே என்கிற நிலையில் ஐபோன் பயனர்களுக்கு மட்டும் மாதத்திற்கு $11 அமெரிக்க டாலர் செலவாகும். இது சந்தாதாரர்கள் ட்வீட்களைத் திருத்தவும், 1080p தரத்தில் வீடியோக்களைப் பதிவேற்றவும் அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் வார்த்தைகள் எண்ணிக்கை:
ட்விட்டர் பயனர் ஒருவர் எலான், ட்விட்டரில் 280 வார்த்தைகளில் இருந்து 4 ஆயிரம் வார்த்தைகளாக உயர்த்தப்படுவது உண்மையா? என்று கேள்வி அனுப்பியுள்ளார். அதற்கு எலான் மஸ்க் ட்விட்டரில் ‘ஆம்’ என்று பதிலளித்துள்ளார்.
Yes
— Elon Musk (@elonmusk) December 11, 2022
முன்னதாக, உலகளவில் மிகவும் பிரபலமான மைக்ரோ- பிளாகிங் தளமான (Micro-blogging) ட்விட்டர்( Twitter) தனது புதிய அப்டேட்டான நோட்ஸ் (Notes feature) வசதியை உருவாக்கி வருவதை உறுதி செய்திருந்தது. ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய புதிய வசதிகளை வழங்கும் நோக்கில் அடுத்ததாக ’நோட்ஸ் ‘என்ற ஆப்சனை கொண்டுவர உள்ளது. இதன் மூலம் ட்விட்டரில் 280 எழுத்துகளுக்கு மேல் பதிவிட முடியும் என்பது சிறப்பு.
✨ Introducing: Notes ✨
— Twitter Write (@TwitterWrite) June 22, 2022
We’re testing a way to write longer on Twitter. pic.twitter.com/SnrS4Q6toX
Write’ tab என்ற பிரிவில் 280 எழுத்துகளுக்கு மேல் எழுதப்படும் இது ட்விட்டரில் ஷேர் செய்ய முடியும்.விரைவில் அறிமுகமாக இருக்கிற ’ட்விட்டர் நோட்ஸ்’ மக்களின் ட்விட்டர் பயன்பாட்டை முற்றிலும் மாற்றிவிடும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி கருத்துகளை வெளிப்படுத்தும் அடிப்படையை கொண்ட ட்விட்டர், இந்தப் புதிய அப்டேட் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், இதற்கான பயன்பாடு அதிகரிக்க காலம் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
ட்விட்டரில் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட எழுத்துக்களாக 140 ஆக நிர்ணயம் செய்திருந்தது. பின்னர், அதை 280 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. ‘ட்விட்டர் நோட்ஸ்’ அப்டேட் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
மேலும் வாசிக்க..
ட்விட்டர் ப்ளூ மீண்டும் தொடக்கம்.. ஆப்பிள் யூசரா நீங்க? உங்களுக்கு சந்தா கட்டணம் எவ்வளவு தெரியுமா?