Parag Agrawal Salary: சொத்து எவ்வளவு? சம்பளம் என்ன? மனைவி யாரு? - கூகுளில் டிரெண்டான ட்விட்டரின் புதிய சிஇஓ!
நேற்று இரவு முதல் இன்றைய டிரெண்ட் பரக் அக்ராவல்தான்! ஆனால், இதில் மக்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து அதிகம் தேடியது பரக் அக்ராவலின் சம்பள விவரம்தான்.
ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஒவாக ஜேக் டார்சி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் அவர் திடீரென இன்று அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பரக் அக்ராவல் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், பரக் அக்ராவல் யார்? அவரது பின்னணி என்ன? அவருக்கு எவ்வளவு சம்பளம்? அவருடைய மனைவி யார்? என நெட்டிசன்கள் தேட தொடங்கிவிட்டனர். நேற்று இரவு முதல் இன்றைய டிரெண்ட் பரக் அக்ராவல்தான்! ஆனால், இதில் மக்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து அதிகம் தேடியது பரக் அக்ராவலின் சம்பள விவரம்தான்.
Deep gratitude for @jack and our entire team, and so much excitement for the future. Here’s the note I sent to the company. Thank you all for your trust and support 💙 https://t.co/eNatG1dqH6 pic.twitter.com/liJmTbpYs1
— Parag Agrawal (@paraga) November 29, 2021
அதுமட்டுமின்றி, ட்விட்டரில் சில ஆயிரம் ஃபாலோவர்களை மட்டுமே பெற்றிருந்த பரக் அக்ராவலை இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர். ட்விட்டர் வாடிக்கையாளர் பலரும், பரக்கை டேக் செய்து ட்விட்டரில் இந்த ஆப்ஷன் வேண்டும், அந்த ஆப்ஷன் வேண்டும் என ட்வீட் செய்து வருகின்றனர்.
சரி பரக் அக்ராவலின் சம்பளம்தான் எவ்வளவு?
ட்விட்டர் சிஇஓ பரக் அக்ராவலுக்கு ஆண்டுக்கு 1.40 மில்லியன் அமெரிக்க டாலர் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் பராக் அகர்வாலின் ஆண்டு வருமானம் ரூ.10,51,57,220.00. அதாவது பத்து கோடியே ஐம்பத்தோரு லட்சத்து ஐம்பத்தி ஏழாயிரத்து இருநூற்று இருபது மட்டுமே (Ten Crore Fifty One Lakh Fifty Seven Thousand Two Hundred Twenty)
நவம்பர் 29,2021 தேதியிட்ட பரக் அக்ராவலுக்கு ட்விட்டர் நிறுவனம் பணி ஆணை வழங்கியுள்ளது. அவருக்கு இனி ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்கன் டாலர் ஊதியமாக வழங்கப்படும். அதுதவிர அவருடைய அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 150% ஆண்டுக்கான போனஸாக வழங்கப்படும். இது தவிர ரெஸ்ட்ரிக்டர் ஸ்டாக் யூனிட்ஸ் (RSU) வாயிலாக 12.5 மில்லியன் டாலர் கிடைக்கப் பெறுவார். பரக் அக்ராவலுக்கு ஓராண்டுக்கு 16 சமமான அளவிலான சம்பள உயர்வு வழங்கப்படும்.
இந்தியாவிலுள்ள சிறந்த ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி பாம்பேவில் பரக் அக்ராவல் இளங்கலை பட்டத்தை முடித்தவர். அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழக்கத்தில் கணினி அறிவியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அந்த சமயத்தில் யாஹூ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் விளம்பரம் தொடர்பாக செயல்படும் பொறியியாளராக பணியில் சேர்ந்தார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்