மேலும் அறிய

Twitter Logo Change: இனிமே டிவிட்டரில் 'குருவி'லாம் பறக்காது.. லோகோ, நிறத்தையும் மாற்றுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

டிவிட்டர் செயலியின் லோகோவை மாற்ற உள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டிவிட்டர் செயலியின் லோகோவை மாற்ற உள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க் அறிவிப்பு:

இதுதொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “டிவிட்டர் தளத்தின் நிறத்தை கருப்பாக மாற்ற வேண்டும்” என கருத்துக்கணிப்பு ஒன்றை தொடங்கியுள்ளார். மற்றொரு பதிவில், ”விரைவில் டிவிட்டரின் பிராண்டை மாற்ற உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து அனைத்து பறவைகளும் விடுவிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியானால், நாளை அது உலகம் முழுவதும் உள்ள டிவிட்டர் பயானாளிகளுக்கு செயல்பாட்டிற்கு வரும் எனவும் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார். அதோடு, டிவிட்டரின் புதிய லோகாவான ”எக்ஸ்” தொடர்பான சிறிய வீடியோவயும் வெளியிட்டுள்ளார். 

புதிய நிறம் என்ன?

டிவிட்டர் தளத்தின் நிறம் வெள்ளையாக இருக்குமா அல்லது கருப்பு நிறமாக இருக்குமா என்பது, எலான் மஸ்க் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவின் அடிப்படையில் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து,  காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பலவற்றை குவித்து தள்ளினார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன. அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது. 

பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

புதிய கட்டுப்பாடு:

இதனிடையே, அண்மையில் வெளியான தகவலின்படி “ வெரிஃபைடு செய்யப்படாத கணக்கில் இருந்து, மற்றொரு கணக்கிற்கு அனுப்பக்கூடிய  நேரடி மெசேஜ்களின் (DM) அளவை விரைவில் குறைக்க உள்ளது ட்விட்டர் நிறுவனம்.  இதனால் ட்விட்டர் ப்ளூ டிக் இல்லாத பயனர்கள், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தான் மெசெஜ்களை (DM) பகிரிந்துக் கொள்ள முடியும். ட்விட்டர் நிறுவனம் அதன் சந்தா சேவையான ப்ளூ டிக் பயனர்களை அதிகரிக்கவும், ஸ்பேம் (spam) மெசெஜ்கள் உள்ளிட்டவற்றை குறைப்பதற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  ஆனால், தற்போது மெசெஜ் வரம்பு பற்றி ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் மெசெஜ்களை அனுப்ப விரும்பும் பயனர்கள் ப்ளூ டிக் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget