Twitter : இனி ட்விட்டரில் பதிவிடும் படங்களும் நம்மிடம் பேசும்.. புதிய சிறப்பம்சத்தை அறிவித்துள்ள ட்விட்டர்!
ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் புதிய சிறப்பம்சமாக `ஆல்ட் டெக்ஸ்ட்’ டிஸ்க்ரிப்ஷன்களை அதிகமாக அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் உருவாக்குவதற்கான பரிசோதனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் புதிய சிறப்பம்சமாக `ஆல்ட் டெக்ஸ்ட்’ டிஸ்க்ரிப்ஷன்களை அதிகமாக அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் உருவாக்குவதற்கான பரிசோதனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ட்விட்டரில் இடம்பெற்றிருக்கும் அனைத்து படங்களுக்கும் `ஆல்ட்’ என்ற பேட்ஜ் பொருத்தப்படும். அந்த பேட்ஜை அழுத்தும் போது, குறிப்பிட்ட படத்தின் டிஸ்க்ரிப்ஷன் காட்டப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ட்விட்டரில் செயலியையும், தளத்தையும் பயன்படுத்துவோரின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கும் விதமாக புதிதாக அக்ஸெஸிபிலிட்டி குழுவை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, சுமார் 3 சதவிகித ட்விட்டர் பயனாளர்கள் முதலில் சோதனை முயற்சியாக ஒரு மாதத்திற்கு இந்தப் புதிய சிறப்பம்சத்தைப் பயன்படுத்துவார்கள் எனவும், சர்வதேச அளவில் அனைவரும் பயன்படுத்தும் விதமாக இந்த சிறப்பம்சம் வரும் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதுவரை ஸ்க்ரீன் ரீடர் முதலானவற்றைப் பயன்படுத்தாமல் மக்கள் யாரும் `ஆல்ட் டெக்ஸ்ட்’ டிஸ்க்ரிப்ஷன்களைப் படிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு பயனாளர்களும் இந்த அம்சத்திற்காக காத்துக் கொண்டிருந்ததாகவும், ட்விட்டர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு, படங்களின் டிஸ்க்ரிப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், அவை ட்விட்டர் தளத்திற்கு என்று பிரத்யேகமாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தளத்தையும், செயலியையும் உருவாக்கும் விதமாக புதிதாக அக்ஸெஸிபிலிட்டி குழுவை உருவாக்கியது ட்விட்டர். அதன்பிறகு இதுபோன்ற புதிய சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வாய்ஸ் மூலமாக அனுப்பப்படும் ட்வீட்களுக்கும், வீடியோக்களுக்கும் லைவ் கேப்ஷன் சேர்க்கும் வசதியை ட்விட்டர் உருவாக்கியது.
மக்கள் தாங்கள் ட்விட்டரைப் பயன்படுத்தும் போது, ஆல்ட் டெக்ஸ்ட் வசதி இடம்பெற்றிருக்கும் படங்களுக்கும், இடம்பெறாத படங்களுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்க்கும் போது, அடுத்த முறை புதிதாக படம் பதிவிடும் போது மக்களை ஆல்ட் டெக்ஸ்ட் வசதியைப் பயன்படுத்த வைக்கும் எனவும், இதன் மூலம் இந்த அம்சம் பிரபலமடையும் எனவும் ட்விட்டர் நிறூவனம் தெரிவித்துள்ளது.
We've gotten a lot of feedback about how to improve the image description (or alt text) experience on Twitter. Today, we're launching 2 features to 3% of Twitter across Android, iOS, and Web: the public ALT badge and exposed image descriptions. 🧵 (1 of 6) pic.twitter.com/HCYzIYEdal
— Twitter Accessibility (@TwitterA11y) March 9, 2022