Twitter X: ஆல் இன் ஆலாக மாறும் ’எக்ஸ்’...பணப்பரிமாற்றம் முதல் உணவு விநியோகம் வரை...எலான் மஸ்கின் மாஸ்டர் பிளான்!
பல ஆண்டுகளாக ட்விட்டரின் பிராண்ட் அடையாளமாக இருந்துவரும் பறவை லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்.
Twitter X: பல ஆண்டுகளாக ட்விட்டரின் பிராண்ட் அடையாளமாக இருந்துவரும் பறவை லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்.
ட்விட்டரை 'எக்ஸ்' ஆப்பாக மாற்றிய மஸ்க்:
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து, காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பலவற்றை குவித்து தள்ளினார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன.
— Elon Musk (@elonmusk) July 23, 2023
அந்த வரிசையில் தற்போது, பல ஆண்டுகளாக ட்விட்டரின் பிராண்ட் அடையாளமாக இருந்துவரும் பறவை லோகோவை மாற்றினார் எலான் மஸ்க். அதாவது, 'எக்ஸ்' (X) என்று லோகோவையும், அதன் பெயரையும் மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இதற்கு பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதை வைத்து மீம்ஸ்களும் வரிசையாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
'எக்ஸ்' ஏன்?
தற்போது ட்விட்டரின் லோகோ பறவைக்கு பதில் எக்ஸாக அதன் லோகோவை மாற்றியுள்ளார் எலான் மஸ்க். மேலும், தற்போது X.COM என்ற தளமும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை கூகுளில் கிளிக் செய்தால் அது தானாக ட்விட்டர் பக்கத்திற்கு எடுத்து செல்லும். இதற்காகவே மஸ்கின் பழைய நிறுவனமான பேபால் நிறுவனத்திடம் இருந்து X.COM என்ற தளத்தை வாங்கி உள்ளார். இதை 1999ஆம் ஆண்டு பேபால் நிறுவனத்திற்கு முன் மஸ்க் உருவாக்கினார். அதன்பின், இந்த நிறுவனம் செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் மீண்டும் அதனை செயல்படுத்தும் விதமாக பேபோல் நிறுவனத்திடம் இருந்து X.COM தளத்தை வாங்கி உள்ளார். இதில் பொருளாதார சேவைகளை கொண்டு வர அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
அம்சங்கள் என்ன?
இந்த லோகோ மற்றும் பெயர் மாற்றத்தை தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, 'எக்ஸ்' ஆப்பை அனைத்து பயன்பாட்டிற்குமான ஒரே ஒரு செயலியாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். அதன்படி, இந்த 'எக்ஸ்' ஆப் மூலம் சாட் செய்தல், போஸ்ட் போடுதல், உணவுகளை ஆர்டர் செய்தல், பணப்பரிமாற்றம் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளை கொண்டு வர முடிவு செய்துள்ளார் மஸ்க். கிட்டத்தப்பட் இந்த எக்ஸ் ஆப் ஏஐ (Artificial Intelligence) மூலம் செயல்படும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற அம்சத்தை போல் சீனாவில் வீ சாட் (WECHAT) என்ற ஆப் உள்ளது. இதற்கு சீனாவில் 1 பில்லியன் பயனர்கள் உள்ளனர். இது சீனாவில் அனைத்து பயன்பாட்டிற்குமான ஒரே செயலியாக இருக்கிறது. அதேபோன்ற செயலியாக 'எக்ஸ்' ஆப்பை எலான் மஸ்க் மாற்ற முடிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.