Twitter| அனுமதியின்றி புகைப்படங்கள் , வீடியோவை பகிர தடை -ட்விட்டரின் புதிய தனியுரிமை கொள்கை!
"தனிநபர்களின் அடையாளங்களைத் துன்புறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும்" டிவிட்டரை பயன்படுத்துவது எங்களுக்கு கவலை அளிக்கிறது”
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) அமெரிக்க இந்தியரான பாரக் அக்ரவால் இனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் செவ்வாய்கிழமையான நேற்று ட்விட்டர் தனது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மற்றவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்வர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பொருத்தவரையில் பதிவிடும் புகைப்படங்களை யார் பார்க்கலாம் , பகிரலாம் போன்ற உரிமைகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ட்விட்டரில் தனிநபர் பதிவிடம் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம் , ரீட்வீட் செய்யலாம். இது தனிநபரின் பாதுக்காப்பிற்கு அச்சுருத்தலாக இருப்பதால் ட்விட்டர் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.Expanding our private information policy to include media என புதிய அறிக்கை ஒன்றை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.
Sharing images is an important part of folks' experience on Twitter. People should have a choice in determining whether or not a photo is shared publicly. To that end we are expanding the scope of our Private Information Policy. 🧵
— Twitter Safety (@TwitterSafety) November 30, 2021
We will take into consideration whether the image is publicly available and/or is being covered by journalists—or if a particular image and the accompanying Tweet text adds value to the public discourse—is being shared in public interest or is relevant to the community.
— Twitter Safety (@TwitterSafety) November 30, 2021
அதன்படி ட்விட்டரில் டிவிட்டரில் பொதுநபராக ( public figures ) ஆக இல்லாத நபர்கள் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அனுமதியின்றி யாரேனும் பயன்படுத்துவது தெரிந்தால் அது குறித்து ட்விட்டரில் புகார் அளிக்கலாம். பின்னர் அந்த வீடியோ நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.எந்த நோக்கத்தில் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகிறது என்பது குறித்து அறிந்துக்கொள்ள நாங்கள் முயற்சிக்கிறோம் என்றும்ஊடகங்கள் பதிவிடும் செய்திகள் மற்றும் கருத்துகள் , பொதுநலன் கருதி வெளியிடும் தனிநபரின் கருத்துகளுக்கு இது பொருந்தாது எனவும் ட்விட்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Images/videos that show people participating in public events (like large scale protests, sporting events, etc.) would generally not violate this policy.
— Twitter Safety (@TwitterSafety) November 30, 2021
For more on what is NOT in violation, read the full policy here:https://t.co/plPa5TgEnM
ட்விட்டர் ஏற்கனவே ஒரு நபரின் தொலைபேசி எண் அல்லது முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதைத் தடைசெய்துள்ளது.ஆனால் தனிநப்ர்களின் புகைப்படங்களை பகிர்ந்து தீங்கிழைக்கும் வகையில் கருத்துகளை பரப்புவது ட்விட்டரில் தொடர் கதையாகி வருகிறது. அது சில வருடங்களாக ட்விட்டரிலேயே விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் "தனிநபர்களின் அடையாளங்களைத் துன்புறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும்" டிவிட்டரை பயன்படுத்துவது தங்களுக்கு கவலை அளிக்கிறது என்றும் அதற்கு தீர்வாகத்தான் இந்த புதிய விதிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ட்விட்டர் கூறியுள்ளது.