Twitter: டுவிட்டர் பயனர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி… இனி 'டிவிட் டெக்' ப்ளூ டிக் அக்கவுண்ட்களுக்கு மட்டும்தான்!
பொதுவாக இது செய்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இடையே மிகவும் பிரபலம். அவர்களுக்கு செய்திகளை தொகுக்க மிக எளிதான விஷயமாக இது திகழ்ந்து வருகிறது.
இணையத்தில் பயன்படுத்தப்படும் TweetDeck இப்போது ப்ளூ டிக் வாங்கிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று டிவிட்டர் நிறுவனம் அறிவித்து பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
'டிவிட் டெக்'
டிவிட்டரை கணினியில் பயன்படுத்தும் பலருக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த 'டிவிட் டெக்'கில் பயனர்கள் அவர்களுக்கு பிடித்தது போல ஹோம் பேஜை மாற்றியமைத்துக்கொள்ளலாம். அவர்கள் அதிகம் பார்க்கும் டாபிக்கை அடிப்படையாக கொண்டு நிறைய பகுதிகளாக பிரித்து அதனை பயன்படுத்துவது, பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக இது செய்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இடையே மிகவும் பிரபலம். அவர்களுக்கு செய்திகளை தொகுக்க மிக எளிதான விஷயமாக இது நிகழ்ந்து வருகிறது.
We have just launched a new, improved version of TweetDeck. All users can continue to access their saved searches & workflows via https://t.co/2WwL3hNVR2 by selecting “Try the new TweetDeck” in the bottom left menu.
— Twitter Support (@TwitterSupport) July 3, 2023
Some notes on getting started and the future of the product…
இனி ப்ளூ டிக் பயனர்களுக்கு மட்டும்
ஒரு ட்வீட்டில் டிவிட்டர் தளம், "நிறுவனம் TweetDeck இன் புதிய, மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளது. முன்பு இலவசமாக கிடைத்த இது தற்போது கட்டணம் செலுத்திய ப்ளூ டிக் பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் இருந்து அதிகப் பலன்களைப் பெற உதவும் இது. பல அம்சங்களை உள்ளடக்கியது. பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகித்தல், எதிர்காலத்தில் போட வேண்டிய இடுகைகளை ஷெட்யுல் செய்தல், ட்வீட்களை சேகரித்து தனித்தனி தலைப்புகளில் வைத்துக்கொள்ளுதல் என பல அம்சங்கள் அடங்கியுள்ளன.
எப்போது அமலுக்கு வரும்
இந்த புதிய கொள்கை இன்னும் 30 நாட்களில் அமலுக்கு வரும் என்று சமூக ஊடக தளம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது. எலன் மஸ்க் கட்டளையிட்ட தொடர்ச்சியான கடுமையான மாற்றங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் சரிபார்க்கப்படாத கணக்குகளுக்கு ஒவ்வொரு நாளும் பார்க்கக்கூடிய ட்வீட்களின் எண்ணிக்கையை 300 ஆக கட்டுப்படுதியது பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. சரிபார்க்கப்பட்ட கணக்குகள் 6,000 பதிவுகளை பார்க்க முடியும். இதற்கிடையில் உலக அளவில் பலருக்கு டிவிட்டர் செயல்படவில்லை என்ற புகாரும் கிளம்பியது. இதனால் டிவிட்டர் டவுன் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனது.
டுவிட்டர் டவுன்
ஆன்லைன் சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான டவுன் டிடெக்டரின் கூற்றுப்படி, உலகளாவிய செயலிழப்பு ட்விட்டரைத் தாக்கிய பின்னர், அதில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி விவாதிக்க ஆயிரக்கணக்கான பயனர்கள் டிவிட்டரை பார்வையிட்டனர். அந்த நேரத்தில் ட்வீட்டைப் பார்க்க, பதிவிட முயன்றபோது, "can't retrieve tweet" என்ற செய்தியைப் பெற்றதாக பலர் புகார் கூறினர். இருப்பினும், அந்த செயலிழப்பு எல்லா பயனர்களுக்கும் ஏற்படவில்லை. டவுன்டெக்டரின் கூற்றுப்படி, ஆப்பில் இருந்து 45 சதவீதம், இணையதளத்தில் இருந்து 40 சதவீதம் மற்றும் ஃபீடில் இருந்து மீதமுள்ள 15 சதவீத புகார்கள் வந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.