Triumph Scrambler 1200 Steve McQueen Edition - இந்திய சந்தையில் விலை என்ன தெரியுமா ?
ஸ்க்ராம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்-குயின் எடிஷன் என்ற பெயர் கொண்ட அந்த வாகனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான டிரையம்ப் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் ஒன்று, கடந்த ஓராண்டு காலமாக விற்பனை செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது அந்த பைக்கின் 2021ம் ஆண்டு மாடல், இந்திய சந்தையில் வெளியாகியுள்ளது. ஸ்க்ராம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்-குயின் எடிஷன் என்ற பெயர் கொண்ட அந்த வாகனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. லிமிடெட் எடிஷனாக இந்திய சந்தையில் வெளியான ஸ்க்ராம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்-குயின் வாகனம் சில காரணங்களுக்காக இந்தியாவில் கடந்த ஓர் ஆண்டாக விற்பனைக்கு செய்யப்படாமல் இருந்தது.
With just 1,000 worldwide, the new #Scrambler1200McQueen Limited Edition motorcycle comes with a host of unique features including a billet-machined, laser-etched, numbered handlebar clamp featuring Steve McQueen’s signature. Discover more: https://t.co/ujF5iClCNN pic.twitter.com/aFh7rqyktc
— TriumphIndiaOfficial (@IndiaTriumph) May 24, 2021
லண்டன் நகரை தலைமையாக கொண்டு செயல்படும் நிறுவனம் தான் டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம். 1900களின் தொடக்கத்தில் உருவான இந்த நிறுவனம் ஜான் என்பவரால் 1983ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனம் பல மாடல் பைக்குகளை இதுவரை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இந்த நிறுவனத்தின் வாகனம் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய சந்தையிலும் கடந்த 2013ம் ஆண்டு முதல் தனது சேவையை அளித்து வருகின்றது. கடந்த 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 5000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
கடந்த ஓர் ஆண்டாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய சந்தையில் தனது ஸ்க்ராம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்-குயின் எடிஷன் பைக்கை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. பல சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் இந்த பைக்கின் ஆரம்ப மாடலின் விலை சுமார் 13 லட்சத்து 75 ஆயிரம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 100 கிலோமீட்டர் செல்ல இந்த வாகனத்திற்கு சுமார் 4.6 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும் என்று அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
இந்த வாகனத்தில் 16 லிட்டர் கெபாசிட்டி கொண்ட டேங்க், 1570 மில்லி மீட்டர் வீல் பேஸ், 870 மில்லிமீட்டர் சீட் ஹைட் மற்றும் சைடு மிரரை கணக்கிடாமல் இந்த வண்டியின் உயரம் 1250 மில்லிமீட்டர் ஆகும். வண்டியின் சராசரி எடை 207 கிலோ. இந்த வண்டியின் பிரேம் டுபுலர் ஸ்டீல் கொண்டு செய்யப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற சக்கரம் இரண்டுமே வழக்கம்போல tubeless டயர்களாக அலுமினியம் ரீம்ஸ் கொண்டு செய்யப்பட்டுள்ளது.
டிரையம்ப் நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சந்தையில் தனது வாகனங்களை விற்பனை செய்துவருகிறது.