Air Tag | ஏர்டேக் மூலம் உளவு பார்க்கும் குற்றங்கள் அதிகரிப்பு! - அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை !
கடந்த ஆண்டு ஏர் டேக் வெளியிடப்பட்டதில் இருந்தே ,ஸ்டாக்கிங் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் தொடர்பான ஆவணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன
ஆப்பிள் நிறுவனத்தால் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட காயின் மாதிரியான கேட்ஜெட்தான் AIRTAG.
மறதி நோயால் அவதியுறும் பயனாளர்களுக்காக இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவிச்சிருந்தாங்க. இந்த நிலையில் அமெரிக்காவின் இரண்டு மாகாண அட்டர்னி ஜெனரல்கள் ஆப்பிள் ஏர் டேக்கினை உளவு பார்க்கும் கருவியாக சிலர் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கடந்த புதன் கிழமை எச்சரிக்கை அறிக்கை வெளியிட்ட நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் மற்றும் பென்சில்வேனியா அட்டர்னி ஜெனரல் ஜோஷ் ஷாபிரோ இருவரும், கடந்த ஆண்டு ஏர் டேக் வெளியிடப்பட்டதில் இருந்தே ,ஸ்டாக்கிங் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் தொடர்பான ஆவணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன என தெரிவித்த அதிகாரிகள், அனுமதியின்றி மக்களை கண்காணிக்க டிராக்கர்களை தவறாக பயன்படுத்துவதை பகிரங்கமாக கண்டித்துள்ளனர். இந்நிலையில் மோசமான நோக்கங்களுக்காக AirTags ஐப் பயன்படுத்துவதை கடினமாக்க, Apple அதன் துணைக்கருவிகளைப் புதுப்பிக்கத் திட்டமிட்டுள்ளது . முன்னதாக ஏர்டேக் பயன்படுத்தாத ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் தங்களின் அருகே ஏர் டேக் இருக்கிறதா என்பதை அறிந்துக்கொள்ளும் வகையில் அப்ளிகேஷன் ஒன்றையும் ஆப்பிள் வெளியிட்டிருந்தது நினைவுக்கூறத்தக்கது.
AIRTAG-ஐ உங்க வீட்டு நாய்க்குட்டி, கார், முக்கியமான ஆவணங்கள் அடங்கிய பை என நீங்கள் அன்றாட வாழ்க்கையில் மறந்துபோற பொருட்கள்ல பொருத்தி வைத்துக்கொள்லலாம். இந்த AIRTAG-ஐ ஐபோனுடன் இணைத்தவுடன், பொருட்களை நீங்கள் மறந்துவைத்துவிட்டு தேடும்பொழுது, மொபைல்ஃபோன் மூலம் இது நியாபகப்படுத்தும். இதில் கொடுக்கப்பட்டுள்ள யூ1 சிப் தொழில்நுட்பம் பொருள் வைக்கப்பட்ட திசை, எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை துல்லியமாக தெரியப்படுத்தும். பொருளின் அருகில் நீங்கள் நெருங்கிவிட்டால் "பீப்ப்ப்ப்ப்" என ஒலியெழுப்பும். அதன் மூலம் நீங்கள் எளிமையாக பொருளை கண்டறிந்துவிடலாம். சிரி மற்றும் Find my app-இல் குரல்கட்டளைகள் மூலமாகவும் இதனை பயன்படுத்தமுடியும். உங்களிடன் ஐஃபோன் இருந்தால் மட்டுமே இதனை ப்ளூ டூத் தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தினை இதில் பயன்படுத்துவதால் உங்கள் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் இந்த ஏர் டேகினை அருகில் வைத்துக்கொண்டு இணைக்கவில்லை என்றாலும் அதுகுறித்த செய்தியை, மொபைல் வாயிலாக தொடந்து உங்களுக்கு தெரிவித்துக்கொண்டிருக்கும். ஏர்டேகினை யாரேனும் திருடுவதற்கு முயற்சி செய்தாலோ அல்லது உங்களை கண்காணிக்க பயன்படுத்தினாலோ அது எச்சரிக்கை ஒலி எழுப்பும் எனவும், ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏர் டேக் தொலைந்துவிட்டால், வேறு ஒரு ஐபோனில் இருந்து ஸ்கேன் செய்து அதன் உரிமையாளரின் விவரங்களை பெறமுடியும். இதற்கு என்.எஃப்.சி என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரையில் மாற்றி அமைத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பை ஏர்டேக் மொபைல் வாயிலாக தெரிவிக்கும்.