மேலும் அறிய

ஊழியர்களுக்கு நிரந்தர Work From Home கொடுத்த சாப்!

உலகின் மிகப்பெரிய பிசினஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான SAP, தனது ஊழியர்கள் விரும்பினால் அலுவலகம் வந்து வேலை செய்யலாம், இல்லாவிட்டால் வீட்டிலிருந்தே பணி புரியலாம் என்ற சலுகையை வழங்கியிருக்கிறது.

வொர்க் ஃப்ரம் ஹோமா இல்லை ஆஃபீஸா? ஒரு லட்சம் ஊழியர்களுக்கு சலுகை கொடுத்த SAP நிறுவனம்
 
உலகின் மிகப்பெரிய பிசினஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான SAP தனது ஊழியர்கள் விரும்பினால் அலுவலகம் வந்து வேலை செய்யலாம் இல்லாவிட்டால் வீட்டிலிருந்தே பணி புரியலாம் என்ற சலுகையை வழங்கியிருக்கிறது.
 
பெருந்தொற்று காலத்தில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஜெர்மணியை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது SAP. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம், கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் எதிர்காலத்தில் தங்களின் ஊழியர்கள் எவ்வாறு வேலை செய்ய விரும்புகின்றனர் என்பது குறித்து ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.

ஊழியர்களுக்கு நிரந்தர Work From Home கொடுத்த சாப்!
அப்போது அந்நிறுவன ஊழியர்களில் 94% பேர் பணிமுறைகளில் சலுகைகளை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். வெகுசிலர் மட்டுமே நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர். எஸ்ஏபி ஊழியரான ஜூலியா ஒயிட், அமெரிக்காவிலிருந்து பணிபுரிகிறார். இவர் அந்நிறுவனத்தின் சீஃப் மார்க்கெட்டிங் அண்ட் சல்யூஷன்ஸ் ஆஃபீஸராக அண்மையில் தான் நியமிக்கப்பட்டார். இதுவரை ஒருமுறை மட்டுமே ஜெர்மனி சென்றுள்ள அவர் சிஇஓ, மேலாளர்கள் உள்ளிட்ட சிலரை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறார். மற்றபடி அமெரிக்காவிலிருந்தே பணிபுரிகிறார்.
தன்னைப் போன்ற சிங்கிள் மதர்களுக்கு (தனித்துவாழும் பெண்) பணியிடங்கள் விருப்பத்தின் பேரில் அலுவலகம் வரலாம் இல்லாவிட்டால் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என வழங்கும் சலுகை மிகவும் சவுகரியமானது. எனக்கு எனது தனிப்பட்ட வேலைகளிலும் கவனம் செலுத்த முடிகிறது, தொழில்முறைத் தேவைகளையும் சிறப்பாகச் செய்ய முடிகிறது எனக் கூறியுள்ளார்.

ஊழியர்களுக்கு நிரந்தர Work From Home கொடுத்த சாப்!
 
இந்நிலையில் தனது ஒரு லட்சம் ஊழியர்களுக்கும் மெயில் அனுப்பிய எஸ்ஏபி நிறுவனம், நம்பிக்கையின் அடிப்படையில் பணியிடத்தை பணியாளரே தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது என்று தகவல் அனுப்பியது. இதன்மூலம் ஊழியர்கள் வீட்டில் மட்டுமல்லாது, வெளியூரோ, வெளிநாடோ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், பணி நேரத்தில் சரியாக பணியைச் செய்துவிட்டால் போதும். அதேபோல் பணி நேரத்தையும் வசதிக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
SAP நிறுவனத்தின் இந்த முடிவு மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களையும் ஈர்த்துள்ளது. Facebook (FB.O), நிறுவனமும் நிரந்தரமாக ரிமோட்டிலிருந்தே ஊழியர்கள் வேலை செய்யும் முறையை அமல்படுத்த முயற்சிக்கிறது.
பிளட்ஜ் டூ ஃபிளக்ஸ்  "pledge to flex" என்ற எஸ்ஏபியின் புதிய திட்டம் உலகம் முழுவதும் வியாபிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ், உலகில் பல விஷயங்களை புதிய இயல்பாகப் புகுத்திக் கொண்டிருக்கிறது. அவற்றில் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையும் ஒன்று. இனி எஸ்ஏபியைப் போல் பல நிறுவனங்களும் இந்த முறைக்கு அணிவகுத்து நிற்கலாம்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
மனித வரலாற்றில் இதுவே முதல்முறை! பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் நாசா விண்கலம்!
மனித வரலாற்றில் இதுவே முதல்முறை! பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் நாசா விண்கலம்!
ரூ.30,000-க்குள் 5 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்! 2026-ல் வாங்க சிறந்த மாடல்கள் எவை?
ரூ.30,000-க்குள் 5 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்! 2026-ல் வாங்க சிறந்த மாடல்கள் எவை?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை? முழு விவரம்
ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை? முழு விவரம்
Maruti Micro-SUV: ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
Yash:
Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
Embed widget