MicroSD வசதி இல்லாத சாம்சங் கேலக்ஸி S22 சீரிஸ்... ஸ்டோரேஜ் வசதி எவ்வளவு? கூடுதலாகப் பெறுவது எப்படி?
சாம்சங் கேலக்ஸி S22, கேலக்ஸி S22+, மற்றும் கேலக்ஸி S22 அல்ட்ரா ஆகிய மாடல் ஸ்மார்ட்ஃபோன்களில் எவ்வளவு ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது?
சாம்சங் கேலக்ஸி S22 அல்ட்ரா, கேலக்ஸி S22+, வென்னிலா கேலக்ஸி S22 ஆகிய மாடல்களை உள்ளடக்கிய சாம்சங் கேலக்ஸி S22 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன் மாடல்களில் கூடுதலாக மைக்ரோ எஸ்.டி கார்ட் இணைக்கும் வசதி இடம்பெறாமல் வெளியிடப்பட்டு வருகிறது. எனினும், சுமார் 1TB வரையிலான ஸ்டோரேஜ் வசதியை கேலக்ஸி S22 அல்ட்ரா என்ற உச்சபட்ச மாடலில் கொடுத்திருப்பதோடு, பிற கேலக்ஸி S22 மாடல்களில் அதிகளவிலான ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடல்களில் ஹெட்ஃபோன் அணிவதற்கான 3.5mm அளவிலான போர்ட் சேர்க்கப்படவில்லை. இது கேலக்ஸி S20 மாடல்களில் இருந்து இடம்பெறுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களின் கேலக்ஸி S22 அல்ட்ரா, கேலக்ஸி S22 முதலான மாடல்களில் மைக்ரோ எஸ்.டி கார்ட் இணைப்பதற்கான ஸ்லாட் இடம்பெறவில்லை. தங்கள் பழைய ஃபோன்களில் அதிக டேட்டா வைத்திருப்பவர்கள் புதியதாக சாம்சங் மாடல் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்கும் போது, அதிகளவிலான ஸ்டோரேஜ் கொண்ட மாடல்களை வாங்க வேண்டும் என்பதற்காக இந்த அம்சம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், க்ளவுட் மூலமாக ஸ்டோரேஜ் மேற்கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி S21 மாடல்களிலும் கூடுதலான ஸ்டோரேஜ் வசதிகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் கூடுதல் ஸ்டோரேஜ் வசதி இல்லை என்பது சாம்சங் வெளியிட்ட விளம்பரக் குறிப்பில் கூறப்படவில்லை. மேலும், இந்த மாடல் ஸ்மார்ட்ஃபோன் குறித்து இணையதளங்களில் வெளியிட்ட தகவல்களிலும் அதனைக் குறிப்பிடவில்லை.
எனினும் சாம்சங் கேலக்ஸி S22 மாடல் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்குபவர்களுக்கு 6 மாதங்களுக்கு 100GB OneDrive கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குவதாக அறிவித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி S22, கேலக்ஸி S22+, மற்றும் கேலக்ஸி S22 அல்ட்ரா ஆகிய மாடல் ஸ்மார்ட்ஃபோன்களில் எவ்வளவு ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது?
சாம்சங் கேலக்ஸி S22, சாம்சங் கேலக்ஸி S22+ ஆகிய மாடல்கள் 8GB RAM +128GB ஸ்டோரேஜ் என்ற வேரியண்டாகவும், 8GB + 256GB வேரியண்டாகவும் வெளியிடப்பட்டுள்ளது. அதே வேளையில், சாம்சங் கேலக்ஸி S22 அல்ட்ரா மாடல் ஸ்மார்ட்ஃபோன் 8GB + 128GB, 12GB + 256GB, 12GB + 512GB, 12GB + 1TB ஆகிய வேரியண்ட் மாடல்களில் கிடைக்கிறது.
சமீபத்திய தகவல் ஒன்றின்படி, சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி S22 அல்ட்ரா மாடலை ஆன்லைன் ஸ்டோர் மூலமாக வாங்குபவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலும் சாம்சங் வெளியிட்டுள்ள விளம்பரங்களில் இடம்பெறவில்லை. சாம்சங் கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களை வாங்க விரும்புபவர்கள் வரும் பிப்ரவரி 21அன்று நள்ளிரவு 11.59 மணி வரை, சாம்சங் இணையதளத்தில் 1999 ரூபாய் செலுத்தி முன்பதிவு மேற்கொள்ளலாம்.