மிகவும் எதிர்பார்க்கப்பட்ட samsung galaxy M52 5G; விற்பனை தேதியை அறிவித்தது அமேசான்!
samsung galaxy M52 5G மாடலை கடந்த வாரம் அமேசான் தளத்தில் அறிமுகப்படுத்தியது
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான samsung galaxy M52 5G ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளதி. பிரபல samsung நிறுவனம் கடந்த ஆண்டு samsung galaxy M51 என்ற மொபைல்போனை சந்தைப்படுத்தியது. அதன் அடுத்த பதிப்பான samsung galaxy M52 5G மாடலை கடந்த வாரம் அமேசான் தளத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால் எந்த தேதியில் விற்பனையாகிறது என்ற விவரங்களை குறிப்பிடவில்லை. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் samsung galaxy M52 5G மாடல் விற்பனைக்கு வர இருப்பதாக அமேசான் அறிவித்துள்ளது.
samsung galaxy M52 5G வசதிகள்:
samsung நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரின் அடிப்படையில் samsung galaxy M52 5G ஆனது 7.4mm அளவில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. samsung galaxy M52 5G மிகவும் எடை குறைந்த மொபைல்போனாக இருக்கும் என்றே சாம்சங் நிறுவனம் இதை குறிப்பிடுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளீட்டு சேமிப்பு வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று பின்பக்க கேமரா வசதிகள், (64 மெகா பிக்சல் பிரைமரி சென்சார், 12 மெகா பிக்சல் அல்ட்ரா ஒயிட் சென்சார், 12 மெகா பிக்சல் மேக்ரோ சென்சார் ) , 32 மெகா பிக்சல் முன்பக்க ஹோல் பஞ்ச் கேமரா வசதி கொடுக்கப்படிருக்கிறது.
Its time to ditch your bulky old phones people! The #LeanestMeanestMonsterEver has finally appeared on the scene and this time it’s 21% sleeker and 100% on fleek. So, flaunt your style with a 7.4mm super slim monster and turn ‘em heads like never before. pic.twitter.com/n5OOpHFAGr
— Samsung India (@SamsungIndia) September 19, 2021
ஃபிங்கர் பிரிண்ட் தொழில்நுட்ப வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் 6.7-inch அளவிலாம full-HD திரை மற்றும் 1,080x2,400 அளவிலாம பிக்சல் ரெசலுயூசன் வசதிகளை கொண்ட Infinity-O டிஸ்ப்ளே வசதிகளை இது கொண்டிருக்கும் என கூறப்படுகி்றது.மேலும் 120Hz அளவுலான ரெஃப்ரஸ் ரேட் மற்றும் 20:9 அளவிலான அஸ்பக்ட் ரேஷியோ வசதிகளும் இதில் இடம்பெறும் என தெரிகிறது.Snapdragon 778G புராசஸருடன் ஆண்ட்ராய்ட் 11 இயங்குதள வசதிகளுடனும் களமிறங்குமாம்.இது தவிர ப்ளூடூத், வைஃபை, வேகமாக சார்ஜிங் செய்வதற்கான USB Type-C port வசதி உள்ளிட்டவைகளும் 4ஜி மற்றும் 5ஜி ஆகிவற்றிற்கான வசதிகளும் samsung galaxy M52 5G மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.
samsung galaxy M52 5G விலை ?
samsung galaxy M52 5G விலை அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் 8 GB ரேம் மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட மொபைலானது கிட்டத்தட்ட 33 ஆயிரம் ரூபாய்க்கு விற்ப்பனையாகலாம் என கூறப்படுகிறது. மேலும் கருப்பு, ஊதா, வெள்ளை என்ற மூன்று நிறத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.