அசர வைக்கும் சிறப்பம்சங்கள்: வெளியானது Samsung Galaxy M42 5G..!
இந்திய பயனாளர்களை மனதில் வைத்து முக்கிய அம்சங்களுடன் Samsung Galaxy M42 5G மாடலை இந்திய சந்தையில் இறக்கியுள்ளது. சாம்சங்கின் புதிய வெளியீடு எப்படியுள்ளது? விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன? பார்க்கலாம்.
இந்திய சந்தையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள சாம்சங் தனது அடுத்த செல்போன் மாடலை வெளியிட்டுள்ளது. Samsung Galaxy M42 5G மாடல், ரேம் மற்றும் ஸ்டோரேஜ்களின் அடிப்படையில் இரண்டு விலை ரேஞ்சுகளில் விற்பனையாகின்றன. அதன்படி 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.21,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ. 23,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுக விலையாக தள்ளுபடியை சாம்சங் அறிவித்துள்ளது. அதன்படி 6GB மாடல் ரூ.19,999 ஆகவும், 8GB மாடல் ரூ.21,999 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் சாம்சங் இணையதளங்களில் இந்த மாடல் விற்பனைக்கு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
6.60 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த மாடல். கேமராவைப் பொருத்தவரை செல்ஃபி பிரியர்களை கவரும் விதமாக முன்பக்க கேமரா 20 மெகாபிக்ஸல் கொண்டுள்ளது. பின்பக்க கேமராவை பொருத்தவரை 48மெகாபிக்ஸல்+8மெகா பிக்ஸல்+5 மெகா பிக்ஸல்+5 மெகா பிக்ஸல் என்ற 4 வகையான கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 6ஜிபி மற்றும் 8 ஜிபி என்ற இருவேறு ரேம் கொண்ட மாடல்கள் உள்ளன. Android 11 ஓஎஸ் கொண்டதாகவும், 5000mAh பேட்டரி கெபாசிட்டி கொண்டதாகவும் இந்த மாடல் உள்ளது. பேட்டரியை பொருத்தவரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 36 மணிநேர டாக்டைம், 22 மணி நேரம் இண்டர்நெட் பயன்பாடு, 34 மணிநேர வீடியோ பயன்பாடு என சாம்சங் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.