Samsung Galaxy F42 | எல்லாமே செம..! நச்சுனு ஒரு ஃபோனை அறிமுகம்செய்த சாம்சங்.! இதுதான் ஸ்பெஷாலிட்டி..
சாம்சங் நிறுவனத்தின் கெலக்ஸி எஃப்-42 ரக மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மொபைலில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
சாம்சங் நிறுவனம் எப்போதும் குறைந்த விலையில் மொபைல் போன்களை சந்தையில் இறக்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் கெலக்ஸி ரக மாடல்கள் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்குகின்றனர். அந்த வகையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொடர்ந்து மேலும் புதிய மாடல் மொபைல் போனை சாம்சங் நிறுவனம் இறக்கியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கெலக்ஸி எஃப்-42 ரக மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மொபைலில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
சாம்சங் எஃப் 42 ரக மாடல் இரண்டு நிறங்களில் வருகிறது. கருப்பு மற்றும் நீள நிறத்தில் இந்த மொபைல் போன் வருகிறது. இந்த மாடலில் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. அது பவர் பட்டனிற்கு அருகில் அமைந்துள்ளதால் எளிதாக இதை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி உள்ளது.
மேலும் இந்த மொபைலின் டிஸ்பிளே வாட்டர் நாட்ச் வகையில் உள்ளது. 6.6 இன்ச் டிஸ்பிளே அளவை கொண்ட இந்த மொபைல் போனின் முன்னாள் கேமரா 8 மெகாபிக்சல் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பின்னால் இருக்கும் கேமரா 64 மெகாபிக்சல், 5 மெகா பிக்சல் வைடு சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மொபைல் போனில் எடுக்கும் புகைப்படங்கள் நன்றாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளது. 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் டைப் சி சார்ஜிங் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் ஆண்ட்ராய்டு 11 ரக ஓஎஸ் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் போன் 5ஜி ரக இணையதள சேவையை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்பு அம்சங்களையும் கொண்ட இந்த மொபைல் போன் 20 ஆயிரத்திற்கும் கீழே இருப்பது தான் இதன் சிறப்பு அம்சம்.
சாம்சங் எஃப் 42 ரக மொபைல் போனின் விலை தற்போது 17,999 ரூபாயாக உள்ளது. மேலும் இது 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வகைகளில் வருகிறது. ஆகவே வாடிக்கையாளர் தங்களது தேவைக்கு ஏற்ப அந்த மொபைல் போனை செல்கெட் செய்து கொள்ளலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: இது கேட்ஜெட்ஸ் தீபாவளி ! - எலெக்ட்ரிக் பட்டாசு முதல் ரங்கோலி ஸ்டிக்கர் வரை !