’ராயல் என்ஃபீல்ட் 2021’ - இந்தியாவில் அறிமுகமாகியுள்ள புதிய மாடல்கள் என்னென்ன?
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டுக்கான எதிர்பார்ப்புக்கு குறைவே இல்லை.
ராயல் என்ஃபீல்ட் பைக்குகளுக்கு இந்திய அளவில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. எல்லா காலத்திலும், பல இளைஞர்களின் கனவு வாகனம் இதுவாகவே இருந்து வருவதால், எல்ஃபீல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தும் வேற்பட்ட வாகனங்களுக்கான எதிர்பார்ப்புகள் எப்போதும் இருந்து வருகிறது. சுமார் 120 ஆண்டுகள் பழமையான நிறுவனம்தான் ராயல் என்ஃபீல்ட். பைக் மட்டும் இல்லாமல் மிதிவண்டி மற்றும் துப்பாக்கி தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்.
முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 250 மற்றும் 500cc பைக்குகளை அந்த நிறுவனம் பெரிய அளவில் தயாரித்து விற்பனை செய்யத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மார்க்கெட்டிலும் ராயல் என்பீல்ட் பைக்குகளுக்கான வரவேற்பு குறையவே இல்லை.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது ராயல் என்பீல்ட் 650 ரகத்தை சேர்ந்த இன்டெர்செப்டர் 650 மற்றும் காண்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு வாகனங்களின் 2021 மாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஆரம்ப விலையாக சுமார் 2.5 லட்சம் முதல் 2.8 லட்சம் வரை தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.