Reliance Jio 5G: நாங்க ரெடி..! உலகின் அதிநவீன 5ஜி நெட்வொர்க்கை களமிறக்கும் ஜியோ - மாஸாக வந்த அறிக்கை!
இந்தியா முழுவதும் உண்மையான 5ஜி சேவைகளை வழங்கும் ஒரே ஆபரேட்டராக ஜியோ மாறும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
![Reliance Jio 5G: நாங்க ரெடி..! உலகின் அதிநவீன 5ஜி நெட்வொர்க்கை களமிறக்கும் ஜியோ - மாஸாக வந்த அறிக்கை! Reliance Jio to roll-out the Worlds Most Advanced 5G Network across India Akash Ambani Reliance Jio 5G: நாங்க ரெடி..! உலகின் அதிநவீன 5ஜி நெட்வொர்க்கை களமிறக்கும் ஜியோ - மாஸாக வந்த அறிக்கை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/01/ee7e271b29d79cf6ddbd0d2b7eecef441659373046_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம், ஜூலை 26 தொடங்கி நடைபெற்றது. முதல் நாளில் நான்கு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், முதல் நாள் முடிவில் பரபரவென ஏலம் சென்றதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இந்த ஏலத்தில் ரூ.88,078 கோடிக்கு விற்கப்பட்ட அலைக்கற்றைகளில் கிட்டத்தட்ட பாதியை வாங்கியது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ. இது குறித்து குறிப்பிட்ட தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா, அதானி குழுமம் 400 மெகா ஹெர்ட்ஸை வாங்கியுள்ளது. அதாவது விற்பனையான மொத்த அலைக்கற்றைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக அனைத்தையும் தனதாக்கியுள்ளது.
இன்று 7வது நாள் ஏலம் முடிவடைந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. "உலகின் மிக மேம்பட்ட 5G நெட்வொர்க்கை இந்தியா முழுவதும் வெளியிடுவதற்கும், டிஜிட்டல் இணைப்பு மற்றும் டிஜிட்டல் தீர்வுகளில் இந்தியாவை உலகத் தலைவராக மாற்றுவதற்கும் ஜியோ தயாராகி வருகிறது. “700MHz, 800MHz, 1800MHz, 3300MHz மற்றும் 26GHz அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெறுவதன் மூலம் அனைத்து 22 வட்டங்களிலும் தலைமைத்துவ நிலையை ஒருங்கிணைக்கிறது. ஜியோவின் தனித்துவமான 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் தடம், இந்தியா முழுவதும் உண்மையான 5ஜி சேவைகளை வழங்கும் ஒரே ஆபரேட்டராக மாறும்’’ எனக் குறிப்பிட்டுள்ளது.
அதானி குழுமம் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளது. ஆனால் இது பொது நெட்வொர்க்குகளுக்கு இல்லை. ஜியோ, 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் உட்பட பல அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளது. 700 மெகா ஹெர்ட்ஸ் என்றாலே 6-10 கிமீ 5ஜி சிக்னல் வரம்பை வழங்கக்கூடிய அளவாகும்.
அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ள நிலையில் தற்போது ஏலம் இப்படியாக நடந்துள்ளது. முதல் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் மூலம் ரூ.13,365 கோடியை அரசு பெறும். தொலைத்தொடர்பு அதிபரான சுனில் பார்தி மிட்டலின் பார்தி ஏர்டெல், 19,867 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பல்வேறு பேண்டுகளில் ரூ.43,084 கோடிக்கு வாங்கியுள்ளது.வோடபோன் ஐடியா லிமிடெட், 18,784 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)