Realme XT: படாரென வெடித்த ரியல்மி.. சாரி கேட்ட நிறுவனம் - ரியல்மி XTன் சம்பவம்! என்ன ஆச்சு?
குறைந்த பட்ஜெட்டிலான 5ஜி மொபைல்போன்களை தேடிவரும் பயனாளர்களின் நம்பர் ஒன் சாய்ஸாக தங்கள் நிறுவனம் இருக்க வேண்டும் என்பதே ரியல்மியின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் ஃபிரண்ட்லி மொபைல்போன்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிறுவனம் ரியல்மி .ரியல்மியின் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த மொபைல்போன்கள் தற்போது 15 ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இந்நிலையில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக 5ஜி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ரியல்மி நிறுவனம் உள்ளது. குறைந்த பட்ஜெட்டிலான 5ஜி மொபைல்போன்களை தேடிவரும் பயனாளர்களின் நம்பர் ஒன் சாய்ஸாக தங்கள் நிறுவனம் இருக்க வேண்டும் என்பதே ரியல்மியின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
இதற்காக சிப்செட் உற்பத்தி மற்றும் மற்ற பாகங்களை தயாரிப்பதற்காக சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ரியல்மி. மார்கெட்டில் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ரியல்மி அவ்வப்போது சில விமர்சனங்களுக்கும் சிக்கிக்கொள்வதும் உண்டு. அப்படியான ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. ரியல்மி XT மாடல் வெடித்து தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது. வெடித்த போன் தொடர்பாக ட்விட்டரில் ஒருவர் புகார் அளித்துள்ள நிலையில் பலரும் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர். அவர் பதிவில், ''என்னுடைய நண்பனின் ரியல்மி XT வெடித்துவிட்டது. எதாவது செய்யுங்கள் என ரியல்மியின் துணை இயக்குநருக்கு ட்வீட் செய்துள்ளார். அவர் வேறு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
My friend's phone Realme XT blast in the evening today....@MadhavSheth1 please do something 🙏 pic.twitter.com/CrCnaOKnIK
— Sandip Kundu (@SandipK75709658) December 28, 2021
உடனடியாக பதில் அளித்துள்ள ரியல்மி இந்தியா, '' ஹாய். சந்தீப்.. பிரச்னையை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. இப்படியான எதிர்பாரா சம்பவத்துக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். உங்கள் நண்பரின் தகவல்களை கூறவும். எங்கள் உதவியை நாங்கள் செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
ரியல்மி XT மாடல் 2019ம் ஆண்டு வெளியானது. 64 எம்பி கேமராவுடன் இந்தியாவில் வெளியான முதல் போன் இது. 4000 mAh பேட்டரி கெபாசிட்டு கொண்டது இந்த மாடல்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்