Realme Smart TV | இன்று வெளியாகிறது ரியல்மியின் 4k ஸ்மார்ட் டிவி: இணையத்தில் கசிந்த தகவல்கள்!
தங்களுடைய இரு மாடல் 4k ஸ்மார்ட் டிவியை இன்று மதியம் வெளியிடுகிறது ரியல்மி.
செல்போன் உலகில் கொடிகட்டிப்பறக்கும் ரியல்மி ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன் போன்ற இதர தயாரிப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த லாக்டவுன் நேரத்தில் தங்களுடைய இரு மாடல் 4k ஸ்மார்ட் டிவியை இன்று மதியம் வெளியிடுகிறது ரியல்மி. 43 இஞ்ச் மற்றும் 50 இஞ்ச் ஆகிய இரண்டு மாடல்களைஇன்று மதியம் வெளியாகவுள்ளது. வெளியாவதற்கு முன்பே ஸ்மார்ட் டிவி தொடர்பான உத்தேச தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை, சிறப்பம்சங்கள் ஆகிய விவரங்கள் கசிந்துள்ளன.
வெளியான தகவலின்படி ரியல்மி 43 இஞ்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.28ஆயிரத்தில் இருந்து 30ஆயிரத்துக்குள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 50 இஞ்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.33000 முதல் ரூ.350000க்குள் இருக்குமென கணிக்கப்படுகிறது.
Redmi note 10s: எப்படியிருக்கு புதிய ரெட்மீ நோட் 10S; போட்டோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
வெளியான தகவலின்படி, 43 இஞ்ச் மற்றும் 50 இஞ்ச் ஆகிய இரண்டு ஸ்மார்ட் டிவிகளுமே quad-core MediaTek SoC கொண்டதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால் மிகச்சரியான SoC விவரம் தெரியவில்லை. ஆண்ட்ராய்ட் 10 அம்சம் கொண்டதாக இருக்கும். வீடியோ குவாலிட்டியைத் தான் பெரிது நம்புகிறது ரியல்மி. இரண்டு டிவிகளுமே Chroma Boost Picture Engine கொண்டுள்ளது. இதனால் வீடியோக்களின் வண்ணங்கள் மிக துல்லியமால கண்ணுக்கு எதிரொலிக்கும். இரண்டு மாடல்களுமே 42k ரெசொலேஷன் கொண்டது.1.07 பில்லியன் வண்ணங்கள் கொடுக்கக்கூடிய திரை என்பதால் கண்ணுக்கு மிகத்தெளிவான வீடியோவை கொடுக்கும்.178 டிகிரி வரை திரையை பார்க்கும் கோண வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு திரையின் சிறந்த அனுபவம் என்பது வீடியோ மட்டும்மல்ல ஆடியோவும் கூட. அதனால் ரியல்மி, ஆடியோவிலும் அதிக கவனம் செலுத்தும் என தெரிகிறது. 24 வாட்ஸ் ஸ்பீக்கர் உடன் Dolby Atmos மற்றும் DTS HD வசதி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு USB சொருகும் வசதி, ஏவி அவுட் போன்ற வழக்கமான வசதிகளும் உள்ளன. செல்போன், மற்ற சாதனங்களுடன் இணைத்துக்கொள்ள வசதியாக டூவல் பேண்ட் வைபை, ப்ளூடூத் வி5 ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மின்சார பயன்பாட்டை பொருத்தவரை 43 இஞ்ச் 100 வாட்ஸ் மின்சாரத்தையும், 50 இஞ்ச் 200வாட்ஸ் மின்சாரத்தையும் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விலை, சிறப்பம்சங்கள் அனைத்தும் இணையத்தில் கசிந்த தகவல்களே தவிர ரியல்மியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல. இன்று மதியம் 12.30 மணிக்கு ஸ்மார்ட் டிவியின் அதிகாரப்பூர்வ தகவல்களை அறியலாம். பொதுவாகவே விலை குறைவாக இருக்கும் என்பதால் ரியல்மீ தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த டிவியும் நல்ல வரவேற்பை பெறும் என்றே தெரிகிறது.
Realme C25 | ரூ.10ஆயிரத்துக்குள் ஒரு ஆல்ரவுண்டர் போன்; எப்படி இருக்கிறது ரியல்மி C25?