Realme GT Neo 3: ரியல்மீ நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்ஃபோன், டேப்லட்.. விவரங்கள் இதோ...
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரியல்மீ GT நியோ 3, ரியல்மீ பேட் மினி ஆகிய இந்த இரண்டு மாடல்களைப் பற்றிய தகவல்களை இங்கே கொடுத்துள்ளோம்...
ரியல்மீ நிறுவனம் இந்தியாவில் புதிதாக பல்வேறு கேட்ஜெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரியல்மீ GT நியோ 3, ரியல்மீ பேட் மினி ஆகிய இந்த இரண்டு மாடல்களைப் பற்றிய தகவல்களை இங்கே கொடுத்துள்ளோம்...
Realme GT Neo 3
ரியல்மீ GT நியோ 3 மாடல் ஸ்மார்ட்ஃபோனில் 6.7 இன்ச் AMOLED ஸ்க்ரீன் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதில் 120Hz refresh rate கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ஸ்க்ரீனுக்கு HDR10+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் வடிவமைப்பு ரேசிங் ஸ்ட்ரைப்ஸ் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பதோடு, இது இந்த ஸ்மார்ட்ஃபோனின் வெவ்வேறு வண்ண மாடல்களுக்குப் பிரத்யேக லுக்கை அளிக்கிறது.
தற்போதைய இந்த ரியல்மீ GT நியோ 3 மாடலில் 5nm MediaTek Dimensity 8100 என்ற சிப் செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் 12GB RAM, 256GB UFS 3.1 ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த மாடலின் கேமராக்களில் முதலாவது 50MP முன்னணி கேமரா, 8MP அல்ட்ராவைட் கேமரா, 2MP மேக்ரோ கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கேமரா செட்டப்பில் 4K ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க கேமரா 16MP சிறப்பம்சம் கொண்டுள்ளது.
பிற அம்சங்களாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், NFC, USB 2.0 Type-C போர்ட், டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்பட்டிருக்கும் கைரேகை சென்சார், இரண்டு சிம் கார்ட் ஸ்லாட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. 80W சார்ஜிங், 5000mAh பேட்டரி அம்சம் கொண்ட ஒரு மாடலும், 150W சார்ஜிங், 4500mAh பேட்டரி அம்சம் கொண்ட மற்றொரு மாடலும் கிடைக்கின்றன. மேலும், நீலம், வெள்ளை, கறுப்பு ஆகிய வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்ஃபோன் கிடைக்கிறது.
Realme Pad Mini
ரியல்மீ பேட் மினி மாடல் 8.7 இன்ச் IPS LCD பேனல் கொண்டது. இதில் ரிசால்யூஷன் 800x1340 பிக்சல்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மெட்டல் பில்ட் கொண்ட இந்த டேப்லட் மாடலில், Unisoc Tiger T616 சிப் செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 3GB/32GB மாடலும், 4GB/64GB மாடலும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், இந்த டேப்லட்டின் பின்பக்க கேமரா 8MP, முன்பக்க கேமரா 5MP ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5mm போர்ட், USB Type-C போர்ட், 6400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளன. ரியல்மீ பேட் மினி மாடலின் வண்ணங்கள் க்ரே, ப்ளூ என இரண்டு வடிவங்களில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
விலை என்ன?
ரியல்மீ GT நியோ 3 மாடலின் 8GB/128GB வேரியண்ட் 36,999 ரூபாய் என்றும், 8GB/256GB வேரியண்ட் 38,999 ரூபாய் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வேரியண்ட்களும் 5000mAh பேட்டரியும், 80W ஆற்றல் கொண்ட சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது. 4500mAh பேட்டரியும், 150W ஆற்றல் கொண்ட சார்ஜிங் வசதியும் கொண்ட 12GB/256GB வேரியண்ட் மாடல் தற்போது 42,999 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மீ பேட் மினி மாடலில் WiFi + 3GB/32GB வேரியண்ட் மாடலின் விலை 10,999 ரூபாய் எனவும், அதன் LTE வெர்ஷன் தற்போது 12,999 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே மாடல்களின் 4GB/64GB வேரியண்ட் மாடலின் WiFi வெர்ஷன் 12,999 ரூபாய் எனவும், LTE வெர்ஷன் 14,999 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.