(Source: ECI/ABP News/ABP Majha)
Realme C25Y | 50 MP கேமரா.. பட்ஜெட் விலையில் 'நச்' போன்.. எப்படி இருக்கு Realme C25Y?
flipkart இணையதளம் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Realme C25Y மொபைலானது பவர்ஃபுள் T610 ஆக்டா-கோர் புராசஸ்ருடன் உருவாக்கப்பட்டுள்ளது
பட்ஜெட் நிறுவனமான Realme தனது Realme C25Y மொபைலை இன்று(செப்டம்பர் 16) சந்தைப்படுத்தியுள்ளது. சமீப காலமாக மொபைல் சந்தையில் மி்குந்த ஹைப்பை ஏற்படுத்திய ரியல்மியின் C series மொபைல்போன்களின் அடுத்த பதிப்பான Realme C25Y அறிமுகமாகியுள்ளது. முன்னதாக இன்று மொபைல் வெளியாகும் என ரியல்மி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று நண்பகல் 12.30 மணியளவில் Realme C25Y ஃபிளிப்கார்ட் வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Realme C25Y வசதிகள்:
flipkart இணையதளம் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Realme C25Y மொபைலானது பவர்ஃபுள் T610 ஆக்டா-கோர் புராசஸ்ருடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆன்லைன் வீடியோ கேம் மற்றும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதற்கு வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. மேலும் மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Realme C25Y மொபைல்போனில் பெரிதும் கவனம் ஈர்க்கப்படுவது அதன் கேமரா குவாலிட்டிதா. அதாவது 50MP கொண்ட மூன்று பின்பக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்று பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள் எடுக்கும் லென்ஸ் , இரண்டாவது கலர் லென்ஸ் , மூன்றாவதாக மேக்ரோ லென்ஸ் ஆகும். மேலும் இதன் மூலம் 8160*6144 ரெசல்யூசன் கொண்ட புகைப்படங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
செல்ஃபி கேமராவானது 8 மெஹா பிக்சல் அளவில் ஒரு வாட்டர் டிராப் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட துளை கேமரா செட்டப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
5000 mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் திறன் கொண்ட ஒடிஜி கேபிள் ஆகிவையும் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங்க் அளவானது 18 வாட்டாக இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் பாதுகாப்பிற்காக ஃபிங்கர் பிரிண்ட் தொழில்நுட்ப வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்துடன் 4GB மற்றும் 6GB ரேம் வசதி மற்றும் 64GB மற்றும் 128GB உள்ளடக்க மெமரி வசதயுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் 720 x 1600 பிக்சல் ரெசல்யூசனுடன் வடிவமைக்கப்படிருப்பதாக கூறப்படுகிறது.
விலை:
பட்ஜெட் மொபைல்போன்களையே அதிகம் அறிமுகப்படுத்தும் ரியல்மி நிறுவனம் . அதிக வசதிகள் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக Realme C25Y-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே இது அடிப்படை பட்ஜெட் மொபைல்களின் விலையில் விற்பனையாகலாம் என கருதப்படுகிறது. 10 ஆயிரம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இருந்து 12 ஆயிரம் ரூபாய் அளவில் விற்பனையாகும் என கூறப்படுகிறது. பிளாக், ப்ளூ மற்றும் கிரே ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகும் Realme C25Y மொபைலை ஃபிளிப்கார்ட் இணையதளம் வாயிலாக விரைவில் பெறலாம்.