Realme 9 series | 3 ஸ்மார்ட்ஃபோன்கள், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் இயர்ஃபோன்ஸ்.. ரியல்மீ வெளியிடும் புதிய கேட்ஜெட்கள்!
ரியல்மீ 9 ஸ்மார்ட்ஃபோன் சீரிஸ், ரொயல்மீ டெக்லைஃப் வாட்ச் S100, டெக்லைஃப் பட்ஸ் N100 ஆகிய கேட்ஜெட்கள் இந்தியாவில் வரும் மார்ச் 10 அன்று முதல் வெளியாகின்றன. இவற்றைப் பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம்..
ரியல்மீ நிறுவனம் தங்களின் புதிய கேட்ஜெட்களை ஒரே நாளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. வரும் மார்ச் 10 அன்று, ரியல்மீ நிறுவனத்தின் ரியல்மீ 9 ஸ்மார்ட்ஃபோன் சீரிஸ், ரொயல்மீ டெக்லைஃப் வாட்ச் S100, டெக்லைஃப் பட்ஸ் N100 ஆகியவற்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளது ரியல்மீ. எனினும் சில தகவல்களின்படி, அதே நாளில், ரியல்மீ 9 4G, ரியல்மீ 9 5G, ரியல்மீ 9 5G SE ஆகிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்களும் வெளியிடப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றைப் பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம்..
ரியல்மீ 9 ஸ்மார்ட்ஃபோன் சீரிஸ், ரொயல்மீ டெக்லைஃப் வாட்ச் S100, டெக்லைஃப் பட்ஸ் N100 ஆகிய கேட்ஜெட்கள் இந்தியாவில் வரும் மார்ச் 10 அன்று, நண்பகல் 12.30 மணி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. ரியல்மீ நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் இந்த கேட்ஜெட்களின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
ரியல்மீ நிறுவனத்தின் துணைத் தலைவரும், ரியல்மீ சர்வதேச வர்த்தகக் குழுமத்தின் தலைவருமான மாதவ் சேத் ஏற்கனவே கூறிய தகவல்களின்படி, ரியல்மீ 9 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் 15 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை பயனாளர்களுக்கு எதிர்காலத்தை நோக்கியதாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
ரியல்மீ 9 4G, ரியல்மீ 9 5G, ரியல்மீ 9 5G SE ஆகிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்கள் ரியல்மீ 9 சீரிஸ் என்ற பெயரின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல்களில் Snapdragon 778 5G SoC, MediaTek Dimensity 810 5G SoC ஆகிய பிராசஸர்கள் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
Fluid Light Design என்ற பின்புற கேமரா வடிவமைப்பும் இந்த மாடல்களின் கொடுக்கப்பட்டுள்ளன. Meteor Black, Stargaze White, Supersonic Blue, Supersonic Black ஆகிய நிறங்களிலும், 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடலையும், 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலையும் கொண்டதாக ரியல்மீ 9 சீரிஸ் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரியல்மீ 9 சீரிஸ் மாடல்கள் ஆண்ட்ராய்ட் 12 ஆடரேடிங் சிஸ்டம் மூலமாக இயங்கும் எனவும், இதில் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இடம்பெற்றிருக்கும் எனவும், முன்பக்கம் செல்ஃபீ கேமரா ஒன்றும் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சாருடன், 5000mAh பேட்டரி வசதி இந்த மாடல்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மீ டெக்லைஃப் வாட்ச் S100... என்ன ஸ்பெஷல்?
ரியல்மீ டெக்லைஃப் வாட்ச் S100 மாடல் 1.69 இன்ச் அளவிலான வண்ன டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது உடலின் ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு முதலானவற்றை அளவிடும் சென்சாருடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிதாக உடல் வெப்பத்தை அளவிடும் சிறப்பம்சமும், 12 நாள் வரை இயங்கும் பேட்டரியும் இடம்பெற்றுள்ளன. மற்ற மாடல்களைப் போலவே இதிலும் வானிலை கணிப்பு, மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல் முதலானவை இடம்பெற்றுள்ளன.
ரியல்மீ டெக்லைஃப் பட்ஸ் N100.. என்ன ஸ்பெஷல்?
ரியல்மீ டெக்லைஃப் பட்ஸ் N100 மாடல் சிலிக்கானால் செய்யப்பட்ட நெக்பேண்ட், இயர்விங்ஸ், மேக்னெடிக் இயர்பட்ஸ் முதலானவற்றுடன் வெளியிடப்பட்டுள்ளது. Magnetic Bluetooth Connection என்ற சிறப்பம்சம் கொண்ட ப்ளூடூத் வசதி இதில் சேர்கப்பட்டுள்ளது. கறுப்பு, க்ரே ஆகிய இரு வண்ணங்களில் இந்த மாடல் விற்பனை செய்யப்படவுள்ளது.