Poco M3 Pro 5G Launch | போக்கோ எம்3 ப்ரோ 5G ; இந்தியாவில் இன்று விற்பனை துவக்கம்!
போக்கோ ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்கின்றது
பிரபல போக்கோ ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்கின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. போக்கோ எம் 3 ப்ரோ 5G என்ற புதிய மாடல் பட்ஜெட் ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது. போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் முதல் 5 ஜி ஸ்மார்ட் போன் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மடலை உலக சந்தையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
GO1 ROBO DOG | பல்டி அடிக்கும், செல்ல ரோபோ நாய் ! விலை எவ்வளவு தெரியுமா?
Flaunting the ‘Killer Looks’ of your #POCOM3Pro 5G is now closer than ever.
— POCO India - Register for Vaccine 💪🏿 (@IndiaPOCO) June 13, 2021
The First Sale goes LIVE tomorrow at 12 pm on @Flipkart.
Don't miss the early bird offer. pic.twitter.com/YKq0yWnRn2
மேலும் அந்த மாடல் செல் போன் இந்திய சந்தையில் போக்கோ நிறுவனத்தின் பிராண்டிங் செய்யப்பட்டு போக்கோ எம் 3 ப்ரோ 5G என்ற பெயரில் வெளியாகின்றது கூறப்படுகிறது.
இந்நிலையில் போக்கோ நிறுவனம் தனது பட்ஜெட் மாடல் ஸ்மார்ட் போனை தற்போது வெளியிடவுள்ளது. போக்கோ எம்3 ப்ரோ மாடல் ஐரோப்பிய சந்தையில் 179 யூரோக்களுக்கு விற்பனையாகவுள்ள நிலையில் இந்திய சந்தையில் 15,995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் 12 மணி முதல் இந்த ஸ்மார்ட் போனை மக்கள் பிளிப்கார்ட் தலத்தில் வாங்கலாம் என்றும் போக்கோ நிறுவனம் கூறியுள்ளது. பவர் பிளாக், போக்கோ எல்லோ, கூல் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளியிடப்படவுள்ளது.
Capture Madness - one lens at a time.
— POCO India - Register for Vaccine 💪🏿 (@IndiaPOCO) June 13, 2021
The 48MP primary camera, depth sensor, and macro camera are the perfect trio for your camera needs.
Catch the first sale of #POCOM3Pro 5G tomorrow, at 12 pm on @Flipkart.#MadSpeedKillerLooks pic.twitter.com/maF6PpmGW7
இதன் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு.
18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
யூஎஸ்பி டைப் சி
பின்புறம் அல்லாமல் பக்கவாட்டில் கைரேகை சென்சார்
48 எம்பி மெயின் கேமரா
2 எம்பி டெப்த் கேமரா
2 எம்பி மேக்ரோ கேமரா
மற்றும் 8 எம்பி செல்பி கேமரா
ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12 தளத்தில் செயல்படும்
6.5 இன்ச் எல்சிடி ஸ்கிரீன்
கார்னிங் கொரில்லா கிளாஸ்
ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 ப்ரோசசர்
பிரபல சியோமி நிறுவனம் அண்மைக்காலமாக குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தில் பல பிட்ஜெட் மாடல் ஸ்மார்ட் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.