Poco M3 Pro 5G Launch | அதிவேக சிப்செட்... கலக்குமா போக்கோவின் அடுத்த மாடல்; விரைவில் வெளியீடு!
Poco M3 Pro 5G கூடிய விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போகோ நிறுவன அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
பட்ஜெட் போன்கள் மூலம் பயனாளர்களிடையே அறிமுகமான போகோ. அடுத்தடுத்த மாடல்களை இறக்கி கைவசம் கிடைத்த வாடிக்கையாளர்களை கைகுள்ளேயே வைத்திருக்கிறது. சர்வதேச சந்தையில் இருக்கும் வணிகப்போட்டியை சமாளிக்க போகோ சிறந்த போன்களை களம் இறக்கவே முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் போகோவின் அடுத்தப்படைப்பாக Poco M3 Pro 5G கூடிய விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போகோ நிறுவன அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
(Poco M3)
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் சில மாதங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது Poco M3 Pro 5G தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போகோ மாடல், ரி-பிராண்டு செய்யப்பட்ட ரெட்மி நோட் 10 5ஜி மாடலாக இருக்கும் எனவும் தெரிகிறது. இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் செல்போன் சிறப்பம்சங்கள் குறித்தான தகவல் இணையத்தில் கசிந்துள்ளன. உலகளவில் இந்தியா மிகப்பெரிய செல்போனுக்கான சந்தை என்றாலும் சர்வதேச அளவில் தாங்கள் வெளியிட்ட அனைத்து மாடல்களையும் போக்கோ இந்தியாவில் களம் இறக்குவதில்லை.
Poco F2 Pro மற்றும் Poco X3 NFC ஆகிய மாடல்கள் சர்வதேச சந்தையில் வெளியானாலும், இந்திய சந்தையிலல் வெளியிடப்படாத மாடல்கள் ஆகும். ஆனால் பல அசத்தலாக ரெடியாகியுள்ள Poco M3 Pro 5G போன் இந்திய சந்தையில் வெளியாகும் என்றே கணிக்கப்படுகிறது. வரும் காலம் 5ஜி காலம் என்பதால் 5ஜியை முதுகெலும்பாகக் கொண்டே இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. அதிவேக 5ஜியை குறைந்த விலையில் பயனாளர்களின் கைகளில் கொண்டு சேர்ப்பதையே போகோ வணிகத்திட்டமாக கொண்டுள்ளது. அதற்கு Poco M3 Pro 5G கைகொடுக்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் வெளியாகாத Poco X3 NFC மாடலின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20000 முதல் ரூ.23000 வரை நிர்ணயம் செய்யப்பட்டது. ரேம், ஸ்டோரேஜ்களின் வித்தியாசங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் இருந்தது. இந்த நிலையில் Poco M3 Pro 5G இந்தியாவில் வெளியானால் Poco X3 NFC விலை ரேஞ்சை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Poco M3 Pro 5G மாடலை பொருத்தவரை பிராசஸர் கவனிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட், மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் கொடுக்கப்படலாம் என்றும், இது ஸ்னாப்டிராகன் 662 ஐ விட அதிவேகமாக இருக்குமென கூறப்படுகிறது. மற்றபடி, வழக்கமான பெரிய டிஸ்பிளே, பேட்டரி கெபாசிட்டி, கேமரா குவாலிட்டி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி இந்த மாடல் வெளியாகும் என தெரிகிறது. இணையத்தில் கசிந்த தகவலின்படி, 6.50 டிஸ்பிளே, 48+2+2 மெகாபிக்ஸன் கொண்ட பின் பக்க கேமராக்கள்,ஆண்ட்ராய்ட் 11, 1080*2400 பிக்சல் கொண்ட ரெசொலேஷன் கொண்டதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது