Paytm பயனாளர்கள் கவனத்திற்கு.. இனி புதிய UPI ஐ.டி : ஒன்97 நிறுவனம் வெளியிட்ட தகவல்!
Paytm பேமென்ட்ஸ் வங்கியின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேசன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
Paytm பேமென்ட்ஸ் வங்கியின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேசன் நிறுவனம் (One 97 Communications Limited (OCL)) அதன் பேமென்ட் சர்வீஸ் ப்ரோவைட் வங்கியிலிருந்து வேறொன்றிற்கு யு.பி.ஐ. ஐ.டி.யை மாற்றுவதை தொடங்கியுள்ளது.
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி (Paytm Payments Bank) தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் அதன் சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு கடந்த மாதம் (ஜனவரி) உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் பிறகு வாடிக்கையாளர் கணக்கு, வாலட் அல்லது FASTag போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப் போன்ற கிரெடிட் சேவை சார்ந்த பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தது.
வங்கி பணப்பரிமாற்ற முறைகளில் ஒன்றான யு.பி.ஐ. பணம் செலுத்தும் முறையை தேசிய கட்டணக் கூட்டமை (National Payment corporation of India) நிர்வகித்து வருகிறது. என்.பி.சி ஐ. ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு கடந்த மார்ச் 14-ம் தேதி யுபிஐ-ஐ மாற்றம் செய்ய அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து தனது பேமென்ட் சர்வீஸ் ப்ரோவைடர் வங்கிகளை Third-Party Application Provider (TPAP) -ஆக மாற்ற அனுமதியளித்துள்ளது. இதனால் இதுவரை ஒன்97 கம்யூனிகேசன் நிறுவனமே அதன் பேமென்ட் சர்வீஸ் ப்ரோவைடராக செயல்பட்டு வந்தது. புதிய மாற்றத்தின்படி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, எஸ் பேங்க் (YES Bank) உள்ளிட்ட வங்கிகள் மூலம் இனி பணப் பரிவர்த்தனைகளை அப்ரூவ் செய்யும் என்று ஒன்97 நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.பி.ஐ. ஐ.டி.-யில் மாற்றம்
பேடிஎம்-ல் வழக்கமாக உள்ள ‘@paytm' என்பது இனி இருக்காது. என்.ஐ.சி.பி. வழங்கியுள்ள நான்கு @ptsbi, @pthdfc, @ptaxis and @ptyes - ஐ.டி.களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்த முடியும்.