PAN Aadhaar link: இந்த தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் செயலிழக்கும்; ஆனால் இவர்களுக்கு மட்டும் விலக்கு
PAN Aadhaar link: பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படுவதில் இருந்து சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், யாரெல்லாம் விலக்கு, பெறுகிறார்கள் என்பது குறித்தான விவரங்களை தெரிந்து கொள்வோம்.
பான் - ஆதார் இணைப்பு:
பான் மற்றும் ஆதார் இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2023 ஆகும். குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் இரண்டு ஆவணங்களையும் இணைக்கவில்லை என்றால், பான் ( நிரந்தர கணக்கு எண் ) செயலற்றதாகிவிடும்.
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக, இரண்டு ஆவணங்களையும் இணைப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் பல முறை நீட்டித்தது, ஆனால் இந்த முறை, அது தீவிரமாக உள்ளது. உங்கள் ஆதார் உடன் இணைக்காவிட்டால் ஏப்ரல் 1 முதல் உங்கள் பான் செயலிழந்துவிடும் என தெரிவித்துள்ளது.
"இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தாமதிக்க வேண்டாம். ஆகையால், இன்றே இணைக்கவும்! வருமான வரிச் சட்டத்தின்படி, விலக்கு பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் மார்ச் 31, 2023 க்குள் தங்கள் நிரந்தர கணக்கு எண்களை (பான்) ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். ஏப்ரல் 1, 2023 முதல், இணைக்கப்படாத பான் செயல்படாது" என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்த கட்டாய விதியில், சில விதிவிலக்குகள் உள்ளன. 2017 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பான்-ஆதார் இணைப்பு கட்டாயத்திலிருந்து நான்கு பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் வசிப்பவர்கள்
- வருமான வரிச் சட்டம் 1961-ன் படி வெளிநாடு வாழ்பவர்
- முந்தைய ஆண்டில் எந்த நேரத்திலும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்;
- இந்தியக் குடிமகன் அல்ல.
நீங்கள் மேற்கண்ட பிரிவின் கீழ் வரவில்லை என்றால், உங்கள் பான் எண்ணை உங்கள் ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என அரசு தெரிவித்துள்ளது.
Also Read: Aavin Milk: ஆவின் பால் பாக்கெட் வாங்க ஆதார் கட்டாயமா? உண்மை என்ன? ஆவின் நிறுவனம் விளக்கம்..