மேலும் அறிய

Tech : ஓப்போ நிறுவனத்தின் Reno 9 Series புதிய செல்போன்...! விற்பனைக்கு வருவது எப்போது...? அசத்தல் அம்சங்கள்..

தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான Reno 9 Series-ஐ, வரும் 24ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள ஓப்போ நிறுவனம், சராசரியாக 10 சதவிதத்திற்கும் அதிகமான சந்தை விற்பனையை  கொண்டுள்ளது. பல்வேறு காரணங்களால் பல முன்னணி நிறுவனங்களின் ஏற்றுமதி மற்றும் விற்பனை நடப்பாண்டில் சரிவை சந்தித்து இருந்தாலும், ஓப்போ நிறுவனம் மட்டும் வளர்ச்சியை கண்டுள்ளது.

குறிப்பாக, கடந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் 13% ஆக இருந்த ஓப்போ நிறுவனத்தின் விற்பனை, நடப்பாண்டின் 3வது காலாண்டில் 16% ஆக உயர்ந்துள்ளது. பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, அடுத்தடுத்து பல்வேறு அம்சங்களுடன் புதிய மாடல் செல்போன்களை அறிமுகப்படுத்துவது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

புதிய மாடல் : 

அந்த வகையில், ஓப்போ நிறுவனத்தின் புதிய மாடலான Reno 9 Series செல்போன் சீனாவில் வரும் நவம்பர் 24 அன்று மதியம் 2.30 மணியளவில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என Weibo சமூகவலைத்தளம் வாயிலாக ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் விற்பனையில் உள்ள ஓப்போ நிறுவனத்தின் Reno 8 சீரிஸ் செல்போன்களுக்கு மாற்றாகவே புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  முதலில் சீனாவில் மட்டுமே இந்த செல்போன் விற்பனைக்கு வர உள்ளது. அதைதொடர்ந்து,  சில வாரங்களுக்கு பிறகே  இந்தியாவில் Reno 9 Series செல்போன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reno 9 Series சிறப்பம்சங்கள்:

12GB மற்றும் 16GB RAM வசதிகளுடன், 128GB, 256GB மற்றும் 512GB ஆகிய ஸ்டோரேஜ் அம்சங்களுடன் Reno 9 Series செல்போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 12GB RAM கொண்ட மாடலில் 4500mAh பேட்டரியும், 16GB RAM கொண்ட மாடலில் 4700mAh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. பஞ்ச் ஹோல் டிசைன், டூயல் ரியர் கேமரா வசதி, Marisilicon X இமேஜ் Neural Processing unit ஆகிய அம்சங்களுடன், கருப்பு மற்றும் தங்கநிறம் உள்ளிட்ட3 வண்ணங்களில் இந்த செல்போன் விற்பனைக்கு வர உள்ளது.

6.7 இன்ச் AMOLED  தொடுதிரை வசதியுடன், 2.8GHZ ஆக்டோ-கோர் புராசசரும் வழங்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 8 மெகா பிக்சல் அல்ட்ரா-வைட் லென்சும் இடம்பெற்றுள்ளது. அதோடு 64 மெகா பிக்சல் செல்பி கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் Reno 9 Series மாடல் செல்போன் விலை ரூ.39,900 ஆக நிர்ணயிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதோடு ரெனோ 9, ரெனோ 9 ப்ரோ மற்றும் ரெனோ 9ப்ரோ பிளஸ் மடல் செல்போன்களும், நவம்பர் 24ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget