OnePlus: பாக்கெட்டில் வைத்த ஃபோன் வெடித்த பரிதாபம் - ஒன் ப்ள்ஸ் கஸ்டமர்கள் உஷார்!
ஒன் ப்ளஸ் நார்ட் ரக போன்கள் குறித்து இது முதல் புகார் அல்ல. டெல்லியில் வழக்கறிஞர் ஒருவர் பயன்படுத்தி வந்த புத்தம் புது ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி மொபைல்போன் வெடித்து சிதறிய சம்பவமும் அதிர்ச்சியானதே.
புதிதாகச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன் ப்ளஸ் நார்ட் ரக போன் வெடித்ததாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன் ப்ளஸ் நார்ட் ரக போன்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன.அறிமுகமான சில நாட்களிலேயே போன்கள் வெடிப்பதாக ட்விட்டரில் புகார்கள் வரத்தொடங்கின. அதற்கு அந்தக் கம்பெனி நிர்வாகமும் பொறுப்பேற்றது. இதற்கிடையே அண்மையில் மும்பையில் மேலும் ஒரு நார்ட் ஃபோன் வெடித்தது.இதுகுறித்து ட்விட்டரில் உள்ள பதிவில், ‘உங்களது நார்ட் போன் என்ன செய்துள்ளது எனப் பாருங்கள். எத்தனை நாளைக்குப் பிரச்னையை மறைக்கப் போகிறீர்கள்.விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள். உடனடியாக பாதிக்கப்பட்டவரைத் தொடர்பு கொள்ளுங்கள்’ எனக் கூறப்பட்டுள்ளது.
@OnePlus_IN Never expected this from you #OnePlusNord2Blast see what your product have done. Please be prepared for the consequences. Stop playing with peoples life. Because of you that boy is suffering contact asap. pic.twitter.com/5Wi9YCbnj8
— Suhit Sharma (@suhitrulz) November 3, 2021
ஒன் ப்ளஸ் நார்ட் ரக போன்கள் குறித்து இது முதல் புகார் அல்ல. டெல்லியில் வழக்கறிஞர் ஒருவர் பயன்படுத்தி வந்த புத்தம் புது ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி மொபைல்போன் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கவுரவ் குலாட்டி. இவர் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி மொபைல்போனை அமேசான் ஆன்லைன் தளத்தில் வாங்கியுள்ளார். கடந்த புதன்கிழமையன்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறையில், வழக்கறிஞர்களுக்கு உரிய கருப்பு அங்கியை அணிந்தபடி தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது தனது அங்கியில் இருந்து வெப்பம் தன் உடலில் பட்டுள்ளது. சுதாரித்துக்கொண்ட அவர் தனது வழங்கறிஞர் அங்கியை கழட்டி தூக்கி வீசியுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டதாக தெரிகிறது
#Blast & #Fire in my brand new #oneplusnord25g.@OnePlus_IN Today morning while i was in my office ( Court Chamber) @OnePlusNord2_ @oneplus @OnePlus_USA pic.twitter.com/TwNKNmnhzo
— GAURAV GULATI (@Adv_Gulati1) September 8, 2021
.அங்கியின் அருகே கவுரவும் அவரது நண்பர்களும் பார்த்தபோது பாக்கெட்டில் வைத்திருந்த புத்தம் புது ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி மொபைல் போனில் புகை வெளியேறிய வண்ணம் இருந்திருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மொபைல்போன் திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்கறிஞர் கவுரவ் கூறுகையில் “ வாங்கி சில நாட்களே ஆன நிலையில் , பழைய மொபைல் போனில் இருந்த டேட்டாவை கூட இதுக்கு மாத்தல, என்னால அந்த அதிர்ச்சியில இருந்து வெளியே வரவே முடியல , நான் சம்பந்தப்பட்ட ஒன் பிளஸ் நிறுவனம் மற்றும் பொருள் வாங்கிய அமேசான் நிறுவனம் மீது வழக்கு தொடர போகிறேன்” என தெரிவித்திருந்தார்.பிரபல ஆண்ட்ராய்ட் மொபைல் நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி மொபைல் போனை கடந்த ஜூலை ரூ. 27,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதமே வாங்கிய 5 நாட்களில் பெண் ஒருவரின் கை பையில் வைத்திருந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி மொபைல் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பதிலளித்த ஒன்பிளஸ் நிறுவனம் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாது என உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது