OnePlus Open Launch : முதல்முறை.. மடிக்கக்கூடிய போனை அறிமுகம் செய்த ஒன்பிளஸ்.. விற்பனை எப்போது தெரியுமா..? இவ்வளவு ஆஃபர்களா?
ஒன்பிளஸ் Open மடிக்கக்கூடிய போனின் டிஸ்ப்ளே மடிக்கும்போது 6.31 அங்குலமாகவும், அதை திறந்தவுடன் 7.82 அங்குலங்கமாகவும் இருக்கும்.
ஒன்பிளஸ் (OnePlus) தனது முதல் மடிக்கக்கூடிய மொபைல் போனான, ஒன்பிளஸ் Open ஐ மும்பையில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஒன்பிளஸ் போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் தனது 10வது ஆண்டு விழாவில் ஒன்பிளஸ் Open என்ற பெயரில் மடிக்கக்கூடிய போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய போனின் எடை 238 கிராம் ஆகும். எனவே இந்த போனை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இந்த போனின் மேற்பரப்பானது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், டைட்டானியம் பிரேம் மற்றும் கார்பன் ஃபைபர் ஆகியவற்றால் ஆனது. இதன் காரணமாக, கீழே விழுந்தாலும் பெரியளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய போனில் மூன்று வகையில் சக்திவாய்ந்த சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் முதன்மை சென்சார் 48MP Sony LYT-T808 Pixel Stacked sensor ஆகும். குறைந்த ஒளி படப்பிடிப்பிற்காக, ஒன்பிளஸ் Open மடிக்கக்கூடிய தொலைபேசியில் 64MP டெலிஃபோட்டோ கேமரா உள்ளது, இது 3x ஜூம் மற்றும் 6x ஜூம் அமைப்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் AI ஆதரவு சென்சாருடன் அல்ட்ரா ரெஸ் ஜூம் உள்ளது. இந்த போன் மூலம் 4K வீடியோக்களையும் எடுக்கலாம்.
ஒன்பிளஸ் Open மடிக்கக்கூடிய போனின் டிஸ்ப்ளே மடிக்கும்போது 6.31 அங்குலமாகவும், அதை திறந்தவுடன் 7.82 அங்குலங்கமாகவும் இருக்கும். மேலும், ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய போனில் ஆக்சிஜன் ஓஎஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த மொபைல் போனில் ஒரே நேரத்தில் இரண்டு டேப்களைத் திறக்கலாம். அதே நேரத்தில், இந்த போன் கேமிங்கிலும் சிறப்பாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளத்.
ஒன்பிளஸ் Open - இன் விவரக்குறிப்புகள்:
இந்த ஒன்பிளஸ் ஃபோனில் Snapdragon 8 Gen 2 செயலி உள்ளது. இது 16GB LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS4.0 ஸ்டோரேஜுடன் வருகிறது. இந்த ஃபோன் 4808 mAh இன் சக்திவாய்ந்த பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 67W வேகமான சார்ஜரை பெற்றுள்ளது. 1 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 42 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று நிறுவனம் கூறுகிறது. ஒன்பிளஸ் Open 5G தொழில்நுட்பத்தை கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் ஓபன் மொபைல் போனின் விலை மற்றும் ஆஃபர்கள்:
ஒன்பிளஸ் அறிமுகம் செய்த இந்த ஓபன் போன் ரூ. 1,39,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்பதிவு அக்டோபர் 19 ஆம் தேதி முதல் இன்று முதல் ஒன்பிளஸ் இன் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் இ-காமர்ஸ் தளமான Amazon இல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய மொபைலை முன்பதிவு செய்யும் போது, நீங்கள் ரூ.8000 வர்த்தக போனஸ் மற்றும் 12 மாதங்களுக்கு கட்டணமில்லா EMIஐப் பெறுவீர்கள். மேலும், ஐசிஐசிஐ டெபிட் கார்டு அல்லது இன்செண்ட் பேங்க் கார்டு மூலம் வாங்கினால், ரூ.5000 தள்ளுபடி கிடைக்கும். அதேசமயம் ஜியோ பிளஸ் பயனர்களுக்கு ரூ.15000 மதிப்புள்ள பெனிஃபிட்களும் வழங்கப்பட இருக்கிறது.
முதல் விற்பனை எப்போது தொடங்குகிறது?
ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய போனின் முதல் விற்பனை வருகின்ற அக்டோபர் 27 முதல் தொடங்குகிறது. இந்த ஃபோன் மூலம், Google One இல் 6 மாதங்களுக்கு 100GB ஸ்பேஸும், YouTube Premium 6 மாத சந்தாவும், Microsoft 365 இன் 3 மாத சந்தாவும் வழங்கப்பட இருக்கிறது.