One Plus10 Pro: One Plus 10 ப்ரோ மாடல் விற்பனை மார்ச் 31-ல் தொடங்குகிறது.. சிறப்பம்சங்கள் தெரியுமா?
வரும் மார்ச் 31-ஆம் தேதி இந்தியாவில் விற்பனையை தொடங்கும் Oneplus 10 ப்ரோ மாடல் ஸ்மாட்ஃபோனின் சிறப்பம்சங்கள்,விலை தெரிந்து கொள்ள..
இந்தியாவில் ஒன் பிளஸ் 10 ப்ரோ மாடல் ஸ்மாட்ஃபோனின் வரும் மார்ச் 31-ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒன் பிளஸ் ஸ்மாட்ஃபோன் பிரபலமான ப்ராண்டு. இந்த ஸ்மாட்ஃபோன்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒன் பிளஸ் இதுவரை ஏராளமான மாடல்கள் அறிமுக செய்துள்ள நிலையில், ஒன் பிளஸ் 10 ப்ரோ மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது, இந்தியாவில் அறிமுகப்படுதுகிறது.
ஒன் பிளஸ் 10 ப்ரோ மாடல், 120Hz அமோல்டு திரையை கொண்டுள்ளது. ஸ்நாப்ட்ராகன் (Snapdragon) 8 ஜென் 1 SoC, உள்ளது. 80 வாட் வேகமாக சார்ஜ் திறன், ஆண்ட்ராய்டு 12 போன்றவைகள் இதன் சிறப்பம்சங்கள்.
Get ready for the #OnePlus10Pro pic.twitter.com/0jmjb5GGAh
— OnePlus (@oneplus) March 24, 2022
இந்த மாடல் 6.7 இஞ்ச் QHD தொடுதிரை, 2.0 அமோல்டு தொடுதிரை கொண்ட இந்த மாடலில் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ராம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மாட்ஃபோனில், செல்ஃபி கேமரா 32 மெகா பிக்சல் கேமராவும், பின்பக்கத்தில் 48, 50, 8, ஆகிய மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமராக்கள் இருக்கின்றன.
Exquisite design, evolving through the generations. #OnePlus10Pro pic.twitter.com/uokMFTGXym
— OnePlus India (@OnePlus_IN) March 24, 2022
மேலும் 5000mAh பேட்டரி திறன், 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6 உள்ளிட்ட நெட்வொர்க் வசதிகளையும் கொண்டுள்ளது ஒன் பிளஸ் 10 ப்ரோ. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட ஒன் பிளஸ் 10 ப்ரோ மாடல் அறிமுக விழா இந்த மாதம் 31-ம் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது என தனது டிவிட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்திய ரூபாயில் இந்த மாடல் ரூ.54,500 ஆக விலை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்