Whatsapp update: வாட்ஸ்-அப் செயலியில் புதிய அம்சம்.. இனி சாட்டிற்கு கூட லாக் போடலாம்
வாட்ஸ்-அப் செயலியில் சாட் ஹிஸ்டரியை பாதுகாப்பாக வைத்திருக்க புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
வாட்ஸ்-அப் செயலியில் சாட் ஹிஸ்டரியை பாதுகாப்பாக வைத்திருக்க புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய அப்டேட் என்ன?
புதியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, குறிப்பிட்ட நபர் அல்லது வாட்ஸ் -அப் குழுவின் சாட் ஹிஸ்டரியை பாஸ்வேர்ட் அல்லது பிங்கர் பிரிண்ட் கொண்டு லாக் செய்யலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு லாக் செய்யும் பட்சத்தில் லாக்ட் காண்டாக்ட்ஸ் எனும் புதிய பட்டியலில் அவை இணையும். செயலிக்குள்ளேயே அவை தனியாக தெரியும் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு தனியாக தெரியும் இந்த சாட் பட்டியலை, பயனாளர் பாஸ்வேர்டை பயன்படுத்தியோ அல்லது பிங்கர் பிரிண்டை பயன்படுத்தியோ மட்டுமே திறக்க முடியும். பாஸ்வேர்ட் மற்றும் பிங்கர் பிரிண்ட் இல்லாமல் யாரேனும் குறிப்பிட்ட சாட்டை திறக்க விரும்பினால், அந்த சாட் ஹிஸ்டரி முழுவதையும் டெலிட் செய்தால் மட்டுமே திறக்க முடியும். இந்த லாக் செய்யப்பட்ட சாட்டில் பெறப்படும் மீடியா மற்றும் புகைப்படங்களும் எதுவும் போனில் சேமிக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்-அப் செயலி:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை அடுத்தடுத்து வழங்குகிறது.
எடிட் வசதி:
அந்த வகையில், ஒருவருக்கு தவறாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை edit என்ற ஆப்ஷன் மூலம் அதனை திருத்திக் கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதுவும் தவறாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்திளை 15 நிமிடங்களுக்குள் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இந்த புதிய வசதியை தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தாமாகவே குறுந்தகவல் அழியும் வசதியில் அப்டேட்:
மேலும், disappearing message என்ற option-ல் புதிய வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்கு முன்பாக disappearing message என்ற option-ஐ 24 நேரம், 7 நாட்கள், 90 நாட்களை மட்டுமே கொண்டு இருந்தது. தற்போது அதில் பல்வேறு ஆப்ஷன்களை விரைவில் மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, 90 நாட்கள் வரை இருந்த நிலையில், தற்போது 1 வருடம், 180 நாட்கள், 60 நாட்கள், 30 நாட்கள், 21 நாட்கள், 14 நாட்கள், 6 நாட்கள், 5 நாட்கள், 4 நாட்கள, 3 மணி நேரம், 1 மணி நேரம் வரை இதனை பயனர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த வசதியும் இப்போதைக்கு சோதனை முயற்சியிலேயே உள்ளது.