Tesla Roadster | என்னது இவ்ளோ வேகமா? - டெஸ்லா நிறுவனம் வெளியிடும் புதிய ஹைப்பர் கார்!
டெஸ்லா ரோட்ஸ்டர் என்ற வகை காரில் புதிதாக ஸ்பேஸ் எக்ஸ் பேக்கேஜ் என்ற எலக்ட்ரிக் கார் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் வெளியிடவுள்ள புதிய கார் ஒன்று 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.1 நொடிகளில் எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. டெஸ்லா ரோட்ஸ்டர் என்ற வகை காரில் புதிதாக SpaceX Package என்ற எலக்ட்ரிக் கார் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த வாகனம் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.1 நொடிகளில் எட்டும் பட்சத்தில், உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் கார் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உலகின் அதிவேக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அதே போல தானியங்கி கார் தயாரிப்பிலும் டெஸ்லா நிறுவனம் பெருமளவு ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த ஹைப்பர் கார் குறித்த தகவல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
டெஸ்லா நிறுவனம் 2008ம் ஆண்டு எலன் மஸ்க் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் அண்மைக்காலமாக தானியங்கி கார் தயாரிப்பில் வெகு பிரபலமாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 'ஆட்டோ பைலட்' முறையில் இயக்கப்பட்ட டெஸ்லா கார் விபத்துக்குள்ளாகி இருவர் உரியிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த 'மாடல் எஸ்' கார்கள் தான் டெஸ்லா கார்களில் வெளியான முதல் தானியங்கி கார். அன்று தொடங்கி இன்று வரை பல தானியங்கி கார்களை டெஸ்லா வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
The Tesla Roadster will be able to do 0.60 in... 1.1 SECONDS! 🤯
— Ali-A (@OMGitsAliA) May 21, 2021
The "SpaceX" pack will have rocket thrusters! pic.twitter.com/Z3p2N0vfRW
அறிவியல் கண்டுபிடிப்புகளின் உச்சமாக தானியங்கி வாகனங்கள் பார்க்கப்படுகிறது. விமானம், கப்பல், ரயில் போன்ற பல போக்குவரத்துக்கு வாகனங்கள் பல ஆண்டுகளாக தானியங்கி முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்களின் அன்றாட பயன்பாட்டில் இந்த தானியங்கி கார்களின் ஆதிக்கம் தற்போது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இதில் தானியங்கி கார் தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் முன்னோடியாகவே திகழ்கிறது
அதேசமயம் இந்த தானியங்கி கார்களால் அவ்வப்போது சில விபத்துகளும் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி சனிக்கிழமையன்று இரவு 11 மணியளவில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிவேகமாக பயணித்த 2019 மாடல் எஸ் கார் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
59 மற்றும் 69 வயது உள்ள அந்த இருவரும் பயணித்த அந்த வாகனம் தானியங்கி மோடில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ள அந்த கார் உடனடியாக தீப்பிடித்த நிலையில் ஓட்டுநர் இருக்கையில் இருந்தவரும் அவருக்கு பின்னல் இருந்தவரும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆனால் சில தினங்கள் கழித்து விபத்திற்கு தானியங்கி முறை காரணமல்ல என்று செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.