LED: அடடே.! மத்திய அரசின் அசத்தல் கண்டுபிடிப்பு; வெயில், மழை, பனி என அனைத்து சூழலிலும் ஒளிரும் எல்.இ.டி.!
LED Tower Test: சுமார் 1800 மீட்டர் உயரத்தில், எல்.ஈ.டி உயர் கோபுர விளக்கின் செயல்பாட்டின் சோதனையானது டார்ஜிலிங்கில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
![LED: அடடே.! மத்திய அரசின் அசத்தல் கண்டுபிடிப்பு; வெயில், மழை, பனி என அனைத்து சூழலிலும் ஒளிரும் எல்.இ.டி.! National Test House conducts successful testing of LED Tower Mast Light for Extreme Conditions LED: அடடே.! மத்திய அரசின் அசத்தல் கண்டுபிடிப்பு; வெயில், மழை, பனி என அனைத்து சூழலிலும் ஒளிரும் எல்.இ.டி.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/d6a475ab020f559905b3f88811b0142a1731409717572572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிக்கலான பருவ காலங்களிலும் பயன்படக் கூடிய எல்இடி உயர் கோபுர விளக்குகளை தேசிய பரிசோதனை மையம் வெற்றிகரமாக பரிசோதித்தது.
அனைத்து காலநிலை:
தேசிய பரிசோதனை மையம் (என்.டி.எச்), உயர் கோபுர எல்.ஈ.டி விளக்கில் ஒரு தனித்துவமான சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இது குறிப்பாக, சிக்கலான பருவ காலத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை, மிக உயர்ந்த பனிச்சிகரங்கள் மற்றும் மிகவும் வெப்பமான, தூசி நிறைந்த பாலைவனங்களில் பயன்படுத்தக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமான சோதனை:
கொல்கத்தாவின் என்.டி.எச் விளக்கு மற்றும் ஃபோட்டோமெட்ரிக் ஆய்வகத்தால், 1800 மீட்டர் உயரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனையின் ஒரு குறிப்பிடத்தக்க அங்கம், மிக உயரமான பனிச்சிகர சோதனை ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டருக்கு மேல் உயரத்தில் ஜெனரேட்டர் தொகுப்புடன் எல்.ஈ.டி உயர் கோபுர விளக்கின் செயல்பாடானது சரிபார்க்கப்பட்டது. இந்த சோதனை மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தேசிய பரிசோதனை மையத்தின் கொல்கத்தாவில் அதிநவீன "விளக்கு மற்றும் ஃபோட்டோமெட்ரிக் ஆய்வகம்" உள்ளது. இது எல்இடி அடிப்படையிலான விளக்குகள் மற்றும் ஒளிர்வான்களை மதிப்பீடு செய்வதற்காக கோனியோபோட்டோமீட்டர் மற்றும் ஸ்பெக்ட்ரோ-ரேடியோமீட்டர் உள்ளிட்ட மேம்பட்ட கருவிகளைக் கொண்டுள்ளது. இந்த வசதி சுற்றுச்சூழல் சோதனையை ஆதரிப்பதுடன், அரசு கட்டிடங்களில் ஆற்றல் திறன் கொண்ட எல்இடி விளக்குகளுக்கு மாறுவதற்கான மத்திய அரசின் முன்முயற்சியுடன் ஒத்துப்போகிறது. செலவு சிக்கனம் மற்றும் நிலைத்தன்மையையும் இது ஊக்குவிக்கிறது.
தற்சார்பு இந்தியா:
இந்த சிறப்பு சேவைகளை வழங்கும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரே ஆய்வகம் என்.டி.எச் என்பது குறிப்பிடத்தக்கது. இது என்ஏபிஎல்-லிருந்து ISO/IEC 17025:2017 அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இது எல்இடி தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனை இரண்டையும் உள்ளடக்கியது.
இதன் மூலம் தொடர்புடைய தரங்களுக்கு இணங்குவதை உறுதிசெய்து, பொருத்தமான இந்திய மற்றும் சர்வதேச தரங்களை கடைப்பிடிப்பதை உறுதி செய்கிறது. இந்த முயற்சி "தற்சார்பு இந்தியா" என்ற தொலை நோக்க ஆதரிக்கிறது. தற்சார்பை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த சோதனை சூழலியல் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூர் தொழில்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு பயனளிக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)