சூரியனைத் தொட்ட நாசா விண்கலம்: வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய பெருமிதத்தில் நாசா விஞ்ஞானிகள்!
விண்கலம் தற்போது 500000 கிமீ நேரம் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதோடு, சூரியனின் கொரோனா பகுதிக்குள் மூன்று முறை சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளது..
வரலாற்றின் முதல் முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு நாசா அனுப்பிய பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம் சூரியனின் மேல் படலத்தைத் தொட்டது. இதன் மூலம் சூரியனில் பல அறியப்படாதத் தகவல்கள் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் எழுந்துள்ளது.
பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனை நாம் யாரும் நெருங்க முடியாது. அதில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்பார்கள். இந்நிலையில் அப்படி என்ன மர்மங்கள் நிறைந்துள்ளது? ஏன் அங்கு யாராலும் செல்ல முடியவில்லை என்பதை அறிய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் எழுந்திருக்கும். இந்த எதிர்ப்பார்ப்பையெல்லாம் நிவர்த்திச் செய்யும் வகையில் தான் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சூரியனின் வளிமண்டல மேலடுக்கை ஆய்வு செய்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் அவ்வப்போது சூரியனைப்பற்றிய பல தகவல்களை நமக்கு அனுப்பி வந்தது.
மேலும் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் அங்குள்ள துகள்கள் மற்றும் காந்தப்புலங்களின் மாதிரிகளைச் சேகரித்துக்கொண்டதாக நாசா தகவல் தெரிவித்து வந்தது. இந்நிலையில் தான் வரலாற்றில் முதல் முறையாக சூரியனின் மேல் படலத்தைத் தொட்டது நாசா அனுப்பிய பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கம். யாருமே நெருங்க முடியாது என்று நினைத்த சூரிய மண்டலத்தை நாசா விண்கலம் நெருங்கியதோடு அந்த புகைப்படங்களையும் விண்வெளி மையத்திற்கு அனுப்பியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்த விண்கலம் அனுப்பிய தகவலின் படி, சூரியனின் இந்த கொரோனா பகுதி அதிக கருப்பு நிறத்திலும், புழுதியாகவும் இருந்துள்ளது. எனவே இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராயப்பட்டுவருகிறது. இந்த விண்கலம் தற்போது 500000 கிமீ/ நேரம் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதோடு, சூரியனின் கொரோனா பகுதிக்குள் மூன்று முறை சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளது.
- .
இந்த செய்தியைக் கேட்ட அனைவருக்கும் வியப்பாக இருந்தாலும் எப்படி இந்த விண்கலம் சூரியனின் மேல்படலத்தைத் தொட்டது என்ற கேள்வி அதிகளவில் எழக்கூடும். எனவே இந்நேரத்தில் நாசா அனுப்பிய விண்கலத்தின் சிறப்பு என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலத்தின் வடிவமைப்பு:
சூரியனில் அதிகளவு வெப்பம் இருப்பதால், அதன் அருகில் நெருங்கும் போது விண்கலம் எரிந்துவிடாமல் இருப்பதற்காக கார் வடிவத்தில் நாசா இந்த விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது. மேலும் பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலத்தின் முன்புறத்தில் வெப்பநிலைத் தடுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலைத் தடுப்பு கருவியானது Reinforced carbon மூலம் தயாரிக்கப்பட்டது. எனவே இந்த விண்கலம் சுமார் 3 ஆயிரத்து முந்நூறு டிகிரி செல்சியல் வரை வெப்பநிலையைத்தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த விண்கலம் 3 மாதங்களில் சூரியனின் வட்டப்பாதையை சென்றடையும் எனக்கூறப்பட்டது. இதனையடுத்து 7 ஆண்டுகள் சூரியனில் ஆய்வை மேற்கொள்வதோடு அதற்குரியப் புகைப்படங்களையும் அனுப்பிவைக்கும் தன்மைக் கொண்டது.
இதுப்போன்ற பல்வேறு சிறப்பான வடிவமைப்புடன் நாசா அனுப்பிய விண்கலம் தான் தற்போது சூரியனின் மேல்படலத்தைப்படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதன் மூலம் சூரியனில் உள்ள பல தெரியாத தகவல்களை நம்மால் அறிந்து கொள்ளமுடியும் என நாசா தெரிவித்துள்ளது.