NASA: இது செவ்வாய்கிரகத்தின் சூரிய உதயம்!! ஆச்சரியமளிக்கும் நாசா புகைப்படங்கள்!
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய்கிரகத்திற்கு ஒரு ரோபோவை தரையிறக்கும் பணியை நாசா வெற்றிக்கரமாக மேற்கொண்டதோடு அதற்கு இன்சைட் என்றும் பெயரிட்டிருந்தது.
சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமாவது குறித்து நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய இன்சைட் என்ற ரோபா அனுப்பிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது குறித்து அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஆய்வு மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய்கிரகத்திற்கு ஒரு ரோபோவை தரையிறக்கும் பணியை நாசா வெற்றிக்கரமாக மேற்கொண்டதோடு அதற்கு இன்சைட் என்றும் பெயரிட்டிருந்தது. அதவாது இன்சைட் என்பது நுண்ணறிவு என்பது பொருளாகும். இதனைப்பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தை ஆய்வு செய்து, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பத் தயாராகும் போது மதிப்புமிக்க பல தகவல்களை நமக்கு சொல்லும் வகையில் அமைகிறது. இதன் பணி தற்போது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சில சுவாரசிஸ்யமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி, நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், sunrise on the mars என்ற தலைப்பில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதில் InSight இன் பணியை விளக்கியது, “அதன் நில அதிர்வு அளவீடு மற்றும் பிற அறிவியல் கருவிகள் மூலம், InSight நூற்றுக்கணக்கான "மார்ஸ்க்வேக்குகளை" அளந்துள்ளது, மர்மமான காந்த துடிப்புகளை ஆய்வு செய்து, இது போன்ற நம்பமுடியாத காட்சிகளை நமக்கு அளித்துள்ளது. InSight இலிருந்து நாம் கற்றுக்கொள்வது செவ்வாய் போன்ற கிரகங்கள் எவ்வாறு முதலில் உருவானது என்பதை மட்டும் வெளிப்படுத்தாது, எதிர்கால நாசா பயணங்களில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு நாம் தயாராகும் போது சிவப்பு கிரகத்தின் வடிவங்களைப் புரிந்துகொள்ள இது உதவும்.
மேலும் பூமியின் பல்வேறு பகுதிகளில் இருந்து சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமாவது குறித்து புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இதில் இன்சைட் எனப்படும் நில அதிர்வு ஆய்வுகள், புவியியல் மற்றும் வெப்பப் போக்குவரத்தைப் பயன்படுத்தி உள் ஆய்வும், மாஸ் லேண்டரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுக்குறித்த எவ்வித தகவலுக்கு தெரியாதவர்கள் பார்க்கும் போது இது கிரகத்தின் நில நடுக்கங்களையும், அதன் உட்புறத்தையும் பார்த்துக்கொண்டிருப்பது போன்று காட்சியளிக்கிறது. மேலும் செவ்வாய்கிரகத்தின் மேலோடு, மேன்டில் மற்றும் அதன் மையப்பகுதியை ஆய்வு செய்யக்கூடிய ஒரு லேண்டராகவும் இது செயல்படுகிறது.
View this post on Instagram
இதோடு மட்டுமின்றி, செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் இப்படித்தான் தெரிகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் புகைப்படம் வெளியாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புடன் அடிவானத்தில் ஒரு சிறிய சூரியனுடன் சாம்பல் கலந்த சூடான வானத்தை காட்டுவது போன்று படம் தெரிகிறது. இது உண்மையில் விடியலின் விளிம்பில் அடர் சாம்பல் நிறத்தில் தோன்றும் மற்றும் மேலே தொங்கும் InSight இன் வன்பொருளாகும் இது உள்ளது.
முன்னதாக நாசாவின் முதல் பணி இன்சைட் மூலம் செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தையும், மேலோட்டம் மற்றும் மையப்பகுதியையும் கண்டறியவதாக இருந்தது. மேலும் நில அதிர்வு அளவீடு மற்றும் இன்னும் சில அறிவியல் கருவீடுகள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இது நில அதிர்வு அளவீடு மற்றும் இன்னும் சில அறிவியல் கருவீடுகள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.