Flipkart’s Big Billion Days-ஐ குறிவைக்கும் motorola வின் டேப்லெட்! - பட்ஜெட் விலையில் டாப் நாட்ச் வசதிகள்!
2017-ஆம் ஆண்டு மோட்டோ நிறுவனம் டேப்லட்டை அறிமுகப்படுத்தியது ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.
கிட்டத்தட்ட 90 வருடங்களுக்கும் பழமையான Motorola நிறுவனம் , தனது மொபிலிட்டி நிறுவனத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு நிறுவியது. ஆரம்ப காலக்கட்டத்தில் மொபைல்போன் துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மோட்டரோலா பல்வேறு காரணங்களால் பின்னடவை சந்தித்துவிட்டது. இருந்தாலும் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி தனது ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்திதான் வருகிறது. இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு மோட்டோ நிறுவனம் டேப்லட்டை அறிமுகப்படுத்தியது.
அதுவும் பயனாளர்கள் மத்தியில் கிளிக் ஆகவில்லை. இந்நிலையில் தனது டேப்லெட்டின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை தயார் செய்துள்ளது மோட்டோ நிறுவனம். இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிவுள்ளன. விரைவில் வரவுள்ள ‘ Flipkart’s Big Billion Days' இல் இந்த moto tablet வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல lenovo நிறுவனம் Motorola நிறுவனத்தின் வர்த்தக உரிமையை வைத்துள்ளது என்பதால் , லினோவா பிராண்டின் கீழ் இந்த புதிய டேப்லெட் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் அதிகம் . குறிப்பாக lenovo tab M10 என்ற பெயரில் வெளியாகும் என தெரிகிறது.
motorola tablet-ஐ பொருத்தவரையில் 10.3-inch திரை அளவு, 4GB ரேம் வசதி , , 128GB உள்ளீட்டு சேமிப்பு வசதி உள்ளிட்டவைகளுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5,000mA பேட்டரி வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள motorala tablet, ஆண்ட்ராய் 11 இயங்குதளத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாம். டேப்லெட் பட்ஜெட் ஃபிரண்ட்லியாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இதன் விலை 20 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என டெல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
motorala நிறுவனம் சமீபத்தில் தனது Motorola Edge 20 Pro மொபைல்போனை ஃபிளிப்கார்ட்டில் சந்தைப்படுத்தியது.இரண்டு வேரியண்ட்டில் அறிமுகமானது. 8GB RAM + 128GB வேரியண்ட் 29,999 ரூபாய்க்கும், 6GB RAM + 128GB வேரியண்ட் 21,499 ரூபாய்க்கும் கிடைக்கின்றன.Motorola Edge 20 Pro ஸ்மார்ட்போனில் 6.7 inch OLED display with a 144Hz refresh rate இருக்கிறது. மேலும் இது Snapdragon 870 chipset உடன், 12GB RAM வசதியும் இருக்கிறது.4000 mAh பேட்டரி வசதி,108MP + 8MP + 16MP (108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 16 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 8 மெகா பிக்சல் சென்சார் )அளவிலான பின்பக்க கேமரா வசதி, 32MP அளவிலான முன்பக்க கேமரா வசதி ஆகிவை வழங்கப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்துடன் எமெரல்ட் மற்றும் பியர்ள் என இரண்டு விதமான நிறங்களில் இந்த Motorola Edge 20 Pro ஸ்மார்ட்போன் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. இது தவிர 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, USB Type-C port ஆகியவை இதில் வழங்கப்பட்டிருக்கும் கனெக்டிவிட்டி வசதிகள். மேலும் இதில் 4500mAh பேட்டரியும், 30W TurboPower ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கிறது.