Vivo V50: விவோ புதிய மாடல் அறிமுகம்? சிறப்புகள் என்ன? விற்பனை எப்போது?
Vivo V50: விவோ V50 மாடல் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

Vivo V50 மாடல் இந்தியவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. விவோ V50 ஸ்மாட்ஃபோன் சிறப்புகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மாட்ஃபோன் சந்தையில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களுடன் பல மாடல்கள் வெளிவருகிறது. பிரபல ஸ்மார்ட்ஃபோன் விற்பனை செய்யும் நிறுவனமான விவோ தனது புதிய மாடலான ’Vivo V50 ’-ஐ அறிமுகம் செய்ய இருக்கிறது. . Snapdragon 7 Gen 7 chipset, 80 வாட் விரைவு சார்ஜிங், 6,000mAh பேட்டரி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
வடிவமைப்பு:
விவோவின் புதிய மாடலான Vivo V50-ல் பல மாற்றங்கள் செய்யப்படுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. க்வாட் - க்கர்வ் டிஸ்ப்ளே, அதானது ஸ்க்ரீனின் நான்கு கார்னர்களிலும் சற்று வளைவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது டிஸ்ப்ளே தரத்தை அதிகரிக்கும். வீடியோ, கேமிங்க் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Vivo V40 மாடலில் dual-curved panel கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, ஸ்மாட்ஃபோன் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு அதன் வடிவமைப்பும் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. l IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்டுள்ளது.
கேமராவின் சிறப்பு என்ன?
Vivo V50 மாடலிலும் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்படுள்ள மாடலில் இருப்பது போன்ற வடிவில் கேமரா இருக்கும். மூன்று கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 50MP சென்சார் உடன் வருகிறது. ப்ரைமரி கேமரா, அல்ட்ராவைட் லென்ஸ், செல்ஃபி கேமரா என தரம் வாய்ந்த புகைப்படங்களை எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. Vivo's Aura Light, குறைந்த ஒளியிலும் தெளிவாக புகைப்படம் எடுக்க உள்ளிட்ட பல கேமரா வசதிகளை கொண்டுள்ளது.
பேட்டரி:
Vivo V50 மாடலில் 6,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. விவோவின் சமீபத்திய Funtouch OS 15 சாஃப்ட்வேர் உடன், ஏ.ஐ. வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். பேட்டரி சார்ஜிங் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவரவில்லை. Qualcomm’s Snapdragon 7 Gen 3 SoC என்று சொல்லப்பட்டுள்ளது.
Vivo V50 பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க..

