2010 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவைத் திரைப்படமான முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மகிழ் திருமேனி.
அருண் விஜய் நடிப்பில் தடையறத் தாக்க திரைப்படம் ஜுன் 2012 இல் வெளியிடப்பட்டது.
நடிகர் ஆர்யாவை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து, மீகாமன் என்ற படத்தை இயக்கினார். இது டிசம்பர் 2014 இல் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
2019இல் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் நேர்மறையான விமர்சனத்தையும் பெற்று, வணிக ரீதியாகவும் வெற்றியை கண்டது.
இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் பிற பிரபல நடிகர்கள் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நாளை (பிப்.6 ) வெளியாகிறது.