மேலும் அறிய
Advertisement
OxygenOS13 : OnePlus நிறுவனத்தின் அடுத்த அப்டேட்! Oxygen OS 13-இல் இடம்பெறவுள்ள சூப்பர் டூப்பர் வசதிகள்!
OxygenOS 13 ஆனது OnePlus ஸ்மார்ட்போன்களுக்கான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமிங் பயன்முறையைக் கொண்டுவருகிறது.
OxygenOS 13:
பிரபல ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள ஆக்ஸிஜன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு அதன் மொபைல்கள் இயங்கி வருகின்றனர். OxygenOS ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்டுதான் உருவாக்கப்படுகிறது. இந்த நிலையில் . OxygenOS அடுத்த பதிப்பான . OxygenOS 13 விரைவில் அறிமுகமாகவுள்ளது. இது முழுக்க முழுக்க ஆண்ட்ராய்ட் 13 ஐ அடிப்படையாக கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளது. .OnePlus 10 Pro ஆனது, OxygenOS 13 புதுப்பிப்பைப் பெறும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.OnePlus 10Tக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் OxygenOS 13 கிடைக்கும் என கூறப்படுகிறது.
OxygenOS 13 இல் இருக்கும் வசதிகள் :
- OnePlus இன் புதிய OxygenOS 13 புதிய அக்வாமார்பிக் வடிவமைப்பு மொழியுடன் வருகிறது. interface முழுவதையும் நீல நிற ஷேடில் கொடுக்கவுள்ளது. மிகச்சிறிய ஐகான்ஸ் , அனிமேஷன்கள் மற்றும் வேறு வடிவங்கள் மற்றும் அமைப்புகளை வழங்குகிறது.
- வரவிருக்கும் OxygenOS 13 ஆனது OxygenOS இன் முந்தைய அப்டேட்டுடன் ஒப்பிடும்போது அனுபவத்தை மிகவும் மென்மையாகவும் நிலையானதாகவும் மாற்றுவதாக உறுதியளிக்கிறது. AI பூஸ்டர் சிஸ்டம் ஒரு நிலையான செயல்திறனை வழங்கும் என கூறப்படுகிறது.
- OxygenOS 13 ஆனது OnePlus ஸ்மார்ட்போன்களுக்கான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமிங் பயன்முறையைக் கொண்டுவருகிறது. இதன் ப்திய ஹைப்பர்பூஸ்ட் முற்றிலும் புதிய அல்காரிதத்தை அடிப்படையாகக் கொண்டது, இது மிகவும் மென்மையான மற்றும் நிலையான கேமிங் அனுபவத்தை உறுதியளிக்கிறது.
- OxygenOS 13 ஆனது OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு ஸ்பேஷியல் ஆடியோவிற்கான ஆதரவைக் கொண்டுவருகிறது. ஸ்பேஷியல் ஆடியோ மூலம், பயனர்கள் வெவ்வேறு பயன்பாடுகளில் ஒலி திசையை சரிசெய்ய முடியும்.
OnePlus OxygenOS 13 (Android 13) pic.twitter.com/ujstTHZu5L
— TechDroider (@techdroider) August 4, 2022
- OxygenOS 13 ஆனது பயனாளர்களுக்கு எப்போதும் ஆன்-ஆன் டிஸ்ப்ளேவைக் கொண்டு வரவுள்ளது. இதற்காக இசை ஸ்ட்ரீமிங் பயன்பாட்டு செயலியான Spotify உடன் OnePlus ஒப்பந்தம் செய்திருக்கிறது. இது பயனாளர்களை AOD (Always on Display) -ல் இருந்தே பிளேபேக்கைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
- பழைய ஏஓடிகளுடன் கூடுதலாக - கேன்வாஸ் ஏஓடி, இன்சைட் ஏஓடி மற்றும் பிட்மோஜி ஏஓடி - ஆக்சிஜன்ஓஎஸ் 13 புதிய உணவு டெலிவரி ஏஓடி உட்பட சில புதிய ஏஓடிகளைச் சேர்க்கிறது. இதன் மூலம் திரையில் இருந்தே அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.Zomato மற்றும் Swiggy போன்ற உணவு விநியோக பயன்பாடுகள் புதிய AOD ஐ ஆதரிக்கும்.
- OxygenOS 13 இன் ஸ்மார்ட் லாஞ்சர் பயனர்களை விரைவாகவும் எளிதாகவும் பயன்பாடுகளுக்கான விட்ஜெட்களைச் சேர்க்க அனுமதிக்கிறது.
சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion