Mi Smart Band 7 : ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள்.. சூப்பரான ஸ்மார்ட்பேண்ட்..
5ATM (50 மீட்டர்) வரை வாட்டர் ப்ரூஃப் தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது.
பட்ஜெட் மொபைல் பிரியர்களுக்கு பிடித்தமான சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் பேண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
Mi Smart Band 7
Xiaomi ஏற்கனவே இந்த ஃபிட்னஸ் டிராக்கரை சீனாவில் மே மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தனது புதிய Mi Smart Band 7 ஐரோப்பாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பேண்ட் Infocomm Media Development Authority (IMDA) மற்றும் NCC போன்ற பல்வேறு சான்றிதழ் தளங்களில் காணப்பட்டது.
So, da ist das Mi Band 7! jaja, Smart Band 7
— Technikfaultier (@Technikfaultier) June 21, 2022
25% größeres Display, 14 Tage Akku, höhöhö und ich hab schonmal was vorbereitet. Preis gibt’s erst um 11:30, ist teurer geworden. #discoverXiaomi2022 pic.twitter.com/MsYIDUa0pv
வசதிகள் :
Mi Smart Band 7 ஆனது 1.62-இன்ச் AMOLED ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் டிஸ்பிலேவானது 192x490 பிக்சல்கள் ரெசல்யூசனையும் 500 nits உச்ச பிரகாசம் (peak brightness) மற்றும் 326ppi பிக்சல் அடர்த்தி(density) ஆகியவற்றையும் கொண்டுள்ளது.அதோடு 100க்கும் மேற்பட்ட தனிப்பயனாக்கக்கூடிய ஸ்கிரீன் ஃபேஸை கொண்டிருக்கிறது.இதய துடிப்பு சென்சார், பெண் ஆரோக்கிய கண்காணிப்பு மற்றும் தூக்க கண்காணிப்பு ஆகியவற்றுடன் SpO2 மானிட்டர் உள்ளிட்ட ஹெல்த் டிராக்கர்களுடன் இது வருகிறது. இது ஸ்கிப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ், மற்றும் டென்னிஸ் உள்ளிட்ட 120 விளையாட்டு முறைகளை ஆதரிக்கிறது.Mi Smart Band 7 இல் அழைப்புகள் மற்றும் செய்தி இரண்டையும் அறியலாம்.இது NFC மற்றும் Bluetooth v5.2 இணைப்புடன் வருகிறது. 5ATM (50 மீட்டர்) வரை வாட்டர் ப்ரூஃப் தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது.ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்படுகிறது. இதன் அளவு 46.5x20.7x12.25mm ஆகும்.
#Xiaomi Smart Band 7 supera um milhão de unidades vendidas
— TugaTech (@TugaTech) June 21, 2022
👉 https://t.co/FX9cSXOncw
...#Mi #Software pic.twitter.com/GpGZft5IsT
விலை :
Xiaomi ஆறு வண்ண விருப்பங்களில் ஃபிட்னஸ் பேண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை கருப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆகும். Mi Band 7 ஆனத்ய் NFC இன்றி நிலையான பதிப்பு ஐரோப்பாவில் EUR 59.99 (தோராயமாக ரூ. 4,700) என்னும் விலையில் கிடைக்கிறது. அறிமுக விலையில் யூரோ 49.99 (தோராயமாக ரூ. 4,100) கிடைக்கும். Mi Smart Band 7 ஆனது கடந்த மாதம் சீனாவில் Redmi Buds 4 Pro உடன் வெளியிடப்பட்டது, அங்கு இதன் நிலையான பதிப்பின் விலை CNY 249 (தோராயமாக ரூ. 2,900) ஆகும். NFC மாறுபாட்டின் விலை CNY 299 (தோராயமாக ரூ. 3,500). ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.