Xiaomi | விரைவில் இந்தியாவில் வெளியாகிறது Mi 11 Lite 4G?: வெளியான தகவல்கள்!
Mi 11 Lite 4G மாடல் இந்தியாவில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் தனக்கென தனி மார்கெட்டை வைத்திருக்கும் சியோமி, சீரான இடைவெளியில் பல்வேறு மாடல் போன்களை இந்தியாவில் களமிறக்கி வருகிறது. அதன்படி, Mi 11 Lite 4G மாடல் இந்தியாவில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக 'சியோமி இந்தியா'வின் விற்பனைப்பிரிவு அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை பதிவிட்டுள்ளார். ஆனால் புதிய மாடலின் ரிலீஸ் தேதி, போன் மாடலின் பெயர் என எதையுமே அவர் வெளியிடவில்லை. ஆனாலும், வெளியாகவுள்ள சியோமி மாடல் Mi 11 Lite மாடலை ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “_IT_ & L_AD_D”என்ற ஒரு புதிரைப்போலவே அவர் ட்வீட் செய்துள்ளார். இது “Lite & Loaded” என்பதையே குறிப்பதாகவும் இதனால் இது Mi 11 Lite தொடர்பான அப்டேட் தான் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் இந்தியாவில் வெளியாகவுள்ள Mi 11 Lite 4G மாடல் என்ற தகவல்களும் டெலிகிராமில் கசிந்துள்ளன. சியோமி, Mi 11 Lite 5G and 4G மாடல்களை மற்ற நாடுகளில் மார்ச் மாதமே வெளியிட்டது.
அதேவேளையில் டெலிகிராமில் கசிந்த தகவலின்படி ஆண்ட்ராய்ட்11 கொண்ட V12.0.4.0.RKQINXM வெர்ஷன் Mi 11 Lite 4G மாடல் விரைவில் இந்தியாவில் வெளியாகலாம் என தெரிகிறது.
இந்தியாவில் வெளியாகாவிட்டாலும் பல்வேறு நாடுகளில் Mi 11 Lite வெளியாகியுள்ளது. அதன்படி அதன் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம். 6.55 டிஸ்பிளே கொண்டுள்ளது. இப்போது வெளியாகும் போன் மாடல்கள் அனைத்திலும் டிஸ்பிளே பெரியதாகவே கொடுக்கப்படுகிறது.
Qualcomm Snapdragon 732G ப்ராசஸர் கொண்டதாகவும், ஆண்ட்ராய்ட் 11 OS கொண்டதாகவும் உள்ளது. கேமராக்களில் கவனம் செலுத்தும் சியோமி, 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இதனால் தெளிவான செல்ஃபி போட்டோ, வீடியோ எடுக்க முடியும். அதேபோல பின்பக்க கேமராவை பொருத்தவரை 64மெகாபிக்ஸல் + 8மெகாபிக்ஸல் + 5மெகாபிக்ஸல் ஆகிய 3 வகை கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 6 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கிறது. பேட்டரி கெபாசிட்டி 4250mAh. 33w சார்ஜரும் கொடுக்கப்படுகிறது இப்போது சந்தைப்படுத்தும் மாடல்கள் பேட்டரி கெபாசிட்டியில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. 5000mAh முதல் 6000mAh வரை பேட்டர் கெபாசிட்டி கொடுக்கப்படுகிறது. அதனடிப்படையில் பார்த்தால் இந்த மாடல் பேட்டரி கெபாசிட்டி சற்று குறைவானதுதான்.
1080x2400 pixels கொண்டதாகவும் இந்த மாடல் உள்ளது. பக்கவாட்டில் விரல்ரேகை சென்சார், 157கிராம் எடை கொண்டதாகவும் இந்த மாடல் உள்ளது.
MI 11 ULTRA மாடல் மட்டுமே MI 11 சீரிஸில் இந்தியாவில் வெளியாகியுள்ள ஒரே போன். கடந்த மாதம் சியோமி வெளியிட்ட அந்த மாடல் 6.8 இஞ்ச் டிஸ்பிளே, டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட், 12 ஜிபி ரேம், 256 இண்டர்நல் ஸ்டோரேஜ், 20MP செல்ஃபி கேமரா, 50MP+40MP+40MP என்ற அசத்தலான 3 பின்பக்க கேமராக்கள், 5,000 mAh பேட்டரி கெபாசிட்டி என வேற லெவல் சிறப்பம்சங்களை கொண்டது குறிப்பிடத்தக்கது.
>> ரூ.10ஆயிரத்துக்குள் ஒரு ஆல்ரவுண்டர் போன்; எப்படி இருக்கிறது ரியல்மி C25?