400-க்கும் அதிகமான ஆப்ஸ்... டவுன்லோடு செய்தால் உங்கள் தரவுகள் அவுட்.. எச்சரிக்கும் Meta(ஃபேஸ்புக்)..!
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் தீங்கு விளைவிக்கும் அப்ளிகேஷன் அப்ளிகேஷன்களை என்னவென்று தெரியாமல் டவுன்லோடு செய்துள்ளனர் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா நேற்று தனது பயனர்களை எச்சரித்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் தீங்கு விளைவிக்கும் அப்ளிகேஷன் அப்ளிகேஷன்களை என்னவென்று தெரியாமல் டவுன்லோடு செய்துள்ளனர் என்றும், இது அவர்களின் கடவுச்சொல்லைத் திருடுவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்களின் சமூக ஊடக தளங்களின் உள்ள தரவைவும் திருட வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
We identified more than 400 malicious mobile apps this year that target people across the internet to steal their @facebook login information.
— Meta Newsroom (@MetaNewsroom) October 7, 2022
Learn more about how to stay safe and what to do if you’re affected: https://t.co/08ieklBAQ5 pic.twitter.com/gTDPRVGgjA
இதுவரை 400க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை Meta கண்டறிந்துள்ளது. இந்த அப்ளிகேஷன்கள் ஆப்ஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து டேட்டாவை திருட வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸ் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலும் கிடைக்கிறது என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர்களை எவ்வாறு இந்த அப்ளிகேஷன்கள் குறிவைக்கிறது..?
மெட்டா இதுகுறித்து தெரிவிக்கையில், 'இந்த அப்ளிகேஷன்கள் Google Play Store மற்றும் Apple App Store இல் கிடைக்கின்றன. அவைகள் புகைப்பட எடிட்டர்கள், கேம்கள், VPN சேவைகள், வணிகம் மற்றும் பிற பயன்பாட்டு செயலிகள் அப்ளிகேஷன்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் வலையில் சிக்கி இந்த அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்கிறார்கள். இந்த ஆப்ஸ் குறித்து மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பயன்பாடுகளை நீக்குவதன் மூலம் தரவுகளை சேமிக்க முடியும்’ என்று தெரிவித்தது.
இந்த ஆப்ஸ் எப்படி வேலை செய்கிறது?
கவர்ச்சிகரமான படங்களின் உதவியுடன், இந்த அப்ளிகேஷன்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இதுமட்டுமின்றி, பயனர்களை நம்பிக்கைக்கு கொண்டு செல்லும் வகையில் ஃப்ரெண்ட் பக்கம் அச்சிடப்பட்டுள்ளன. இதன் உதவியுடன், அவர்கள் எதிர்மறையான விமர்சனங்களை மறைத்து பயனர்களை கவர செய்கின்றனர்.
மெட்டா பாதுகாப்புக் குழுவின் கூற்றுப்படி, இந்த அப்ளிகேஷன்கள் அம்சங்களைப் பயன்படுத்த பயனர்களிடமிருந்து பேஸ்புக் கணக்கு உள்நுழைவைக் கேட்கிறது. ஒரு பயனர் பேஸ்புக் அல்லது வேறு எந்த தளத்திலிருந்தும் உள்நுழைந்தவுடன், டவுன்லோட் செய்த அப்ளிகேஷன்கள் அவரது பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை திருடுகின்றது.
இதிலிருந்து எப்படி தப்பிக்க முடியும்?
உள்நுழைவின் அடிப்படையில் போலி பயன்பாடுகள் மற்றும் உண்மையான பயன்பாடுகளை வேறுபடுத்துவது கடினம். பேஸ்புக் அல்லது பிற சமூக ஊடக தளங்கள் உள்நுழையுமாறு பயனர்களைக் கேட்கும் பல முறையான பயன்பாடுகளும் உள்ளன.
அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யும் முன் உள்நுழையச் சொன்னால், அதைப் பதிவிறக்க வேண்டாம் இது தவிர, பயன்பாட்டைப் பதிவிறக்கும் முன், அதன் வெளியீட்டாளர் மற்றும் பிற விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். இந்த செயலியானது போலியானதா அல்லது உண்மையா என்பதை நீங்கள் அறியலாம்.
உங்கள் தொலைபேசியில் அத்தகைய பயன்பாடு காணப்பட்டால் என்ன செய்வது? கேள்வி என்னவென்றால், நீங்கள் ஏற்கனவே அத்தகைய பயன்பாட்டைப் பதிவிறக்கியிருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இதற்கு முதலில் அந்த செயலியை உங்கள் மொபைலில் இருந்து நீக்க வேண்டும்.
உடனடியாக உங்கள் சமூக ஊடக கணக்குகளின் கடவுச்சொல்லை மாற்றி, டபுள் ஸ்டெப் வெரிஃபிகேஷன் கொடுத்து வைக்க வேண்டும். இதன் மூலம், யாராவது உங்கள் கணக்கில் உள்நுழைய முயற்சித்தால் விரைவில் உங்களுக்கு எச்சரிக்கை கிடைக்கும்.