Honor வெளியிட்ட சூப்பர் டூப்பர் லேப்டாப்..! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதுதான்!!
இந்த இரு மாடல்களும் 10 ஜெனரேஷன் இண்டல் கோர் ப்ராசஸர், அதிவேக சார்ஜிங் சப்போர்ட், பாப் அப் வெப்கேம், பேக்லைட் கீ போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
Honor MagicBook X 14 மற்றும் MagicBook X 15 ஆகிய இரு லேப்டாப் மாடல்களை கடந்த புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளது Honor நிறுவனம். இந்த இரு மாடல்களும் 10 ஜெனரேஷன் இண்டல் கோர் ப்ராசஸர், அதிவேக சார்ஜிங் சப்போர்ட், பாப் அப் வெப்கேம், பேக்லைட் கீ போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பயன்படுத்துபவர்களின் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கலர் ஏற்ற இறக்கம், ப்ளூ லைட் அட்ஜெஸ்ட்மெண்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாடல்களுமே விண்டோஸ் 10 பெற்றுள்ளன. அடுத்த அப்கிரேடில் நிச்சயம் விண்டோஸ் 11 கிடைக்கும் என ஹானர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த லேப்டாப்பில் கைரேகை வசதியும், பயோமெட்ரிக் ஆதண்டிகேஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
Travel like a pro with HONOR MagicBook X 14 and X 15 which have premium aluminium metal body. With exceptional battery life, you can be more productive and work uninterrupted. Sales start on 6th April!https://t.co/SwlQXJ9OJe#MagicAtFirstSight #MagicBook pic.twitter.com/2YtnForT3h pic.twitter.com/hA9a5AauGp
— Praveen Gomawat (@GomawatPro) April 3, 2022
விலை நிலவரம்..
Honor MagicBook X 14 மாடலானது ரூ.42,990ல் இருந்து தொடங்குகிறது. இந்த மாடல் Intel Core i3 கொண்டதாக உள்ளது. அதேபோல Intel Core i5 மாடல் லேப்டாப் ரூ.51990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Honor MagicBook X 15 லேப்டாப்பானது ரூ.40,990ல் இருந்து கிடைக்கிறது. இரண்டு லேப்டாப்களும் அறிமுக சலுகையாக ரூ.5000 தள்ளுபடியில் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, MagicBook X 14, core i3 மாடல் ரூ.39990க்கும் core i5 மாடல் ரூ.46990க்கும் விற்பனையாகிறது. பல்வேறு தள்ளுபடி மற்றும் குறிப்பிட்ட வங்கிகளுக்கான தள்ளுபடி என அமேசானில் இந்த லேப்டாப்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
Experience #MagicAtFirstSight with a all day battery of #honor #magicbook pic.twitter.com/QVKBZO0j90
— PSAV Honor (@psavindia) April 3, 2022
சிறப்பம்சங்கள் என்ன?
Honor MagicBook X 14:
14 இன்ச் கொண்ட டிஸ்பிளே, 1920x1080 pixels ரெசொலேஷன், 8ஜிபி ரேம் , விண்டோஸ் 10, 256 GB ssd, 1.38 கிலோகிராம் எடை
Honor MagicBook X 15:
இது 15.60 இன்ச் கொண்ட டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. 1920x1080 pixels ரெசலோஷன். 8ஜிபி ரேம், விண்டோஸ் 10, 256 GB ssd, 1.56 கிகி எடை கொண்டதாக உள்ளது.