நெஞ்சே எழு: Koo App இடர்பாடுகளின்போது எப்படி செயல்படுகிறது?
இந்தியாவில் பண்மொழி நுண்வலைப்பதிவு தளமாக மார்ச் 2020 இல் (Koo App) கூஆப் நிறுவப்பட்டது. 15 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தற்போது (Koo App) கூஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
#நெஞ்சேஎழு பிரச்சாரம் வழியாக தமிழ்நாட்டில் வெள்ள பாதித்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்க (Koo App) கூஆப் முன்னெடுக்கும் முயற்சி
உதவிக்கு காத்திருப்பவர்களும், உதவி செய்ய தயாராக இருப்பவர்களும் (Koo App) கூஆப் வழியாக இணைகிறார்கள்!
இந்தியாவின் நுண்வலைப்பதிவு தளமான (Koo App) கூஆப், சென்னை வெள்ளம் மற்றும் தமிழ்நாடு மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் #நெஞ்சேஎழு எனும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இதன் வழியாக, வெள்ளத்தால் பாதிக்கப்படும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய (Koo App) கூசெயலி பாலமாக இருக்கிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் கனமழை துவங்கியதில் இருந்து, வானிலை செய்திகளை உடனுக்குடன் அறியவும், கனமழையால் தங்கள் ஊர் மற்றும் பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்கள், பிரச்சனைகள் குறித்து பொதுவெளியில் பகிர்வதற்கும், வெள்ளத்தால் ஏற்படும் அவசர தேவைகளுக்கு உதவிகளை நாடவும் தமிழ்நாடு மக்கள் (Koo App) கூசெயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
#நெஞ்சேஎழு பிரச்சாரத்தில் பங்கெடுத்துள்ள உதவிடத்தான் பிறந்தோம் எனும் தன்னார்வல அமைப்பு, உதவிக்கு அணுக வேண்டிய அவசர தொடர்பு எண்ணை அறிவித்து, சென்னையில் வெள்ள பாதிப்பால், வீட்டை விட்டு வெளியே வர முடியாதவர்கள், எங்களை தொடர்பு கொள்ளலாம், அவசர தேவைகள், குழந்தைகளுக்கு பால் பாக்கெட், முதியவர்களுக்கு மருந்து, உணவு என முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக (Koo App) கூவில் பதிவிட்டனர். தமிழ்நாட்டின் வெதர் மேன் என்று அறியப்படும், பிரதீப் ஜான் சமீபத்தில் (Koo App)கூவில் இணைந்துள்ளார். தமிழ்நாட்டின் வானிலை தொடர்பான தகவல்களை அவர் அதில் பகிர்ந்து வருகிறார்.
மேலும், (Koo App) கூ செயலி நடத்திய இணைய சந்திப்பில் கலந்து கொண்ட நபர்கள், தற்போதைய வெள்ள பாதிப்பு நிலவரங்கள், எடுக்க வேண்டிய தற்காப்பு வழிமுறைகள், கடந்த காலங்களில் நிகழ்ந்த சுனாமி அனுபவங்கள், 2015 வெள்ளப்பாதிப்பு அனுபவங்கள், இனி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என பலவற்றை பகிர்ந்தார். குறிப்பாக ஆவண பாதுகாப்பு, உணவு, குடிநீர் என மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளும் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்த போதும், (Koo App) கூஆப் 'கோவிட் போராளிகள்' எனும் அமைப்பை கூதளத்தில் முன்னெடுத்தது, அதன் வழியாக மருத்துவ படுக்கை, ஆக்ஸிஜன், கொரோனா தடுப்பூசிகள் இருப்பு மற்றும் பிற தகவல்கள் முறையாக சென்றுசேர உதவியது.
(Koo App) கூ பற்றி:
இந்தியாவில் பண்மொழி நுண்வலைப்பதிவு தளமாக மார்ச் 2020 இல் (Koo App) கூஆப் நிறுவப்பட்டது. 15 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தற்போது (Koo App) கூஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் தாய்மொழியில் கருத்துக்களை கூவில் பகிர முடியும். இந்தியாவில் வெறும் 10% மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள், ஆழமான மொழியை வழங்கக்கூடிய ஒரு சமூக ஊடக தளத்தின் ஆழமான தேவை உள்ளது. இந்திய பயனர்களுக்கு மொழி அனுபவங்கள் மற்றும் ஒருவரோடு ஒருவரை இணைக்க (Koo App) கூஅப் உதவுகிறது