Khaby Lame Profile | இன்ஸ்டாவுக்கு போய் மார்க்கையே கலாய்க்கும் கபிலேம்.! யாரு சாமி நீ?
டிக் டாக் மூலம் பிரபலமான கபி லேம் இன்ஸ்டா, ட்விட்டர், பேஸ்புக் என எதோ ஒரு வழியில் நம்மிடம் வந்து சேர்ந்துவிட்டார்.
நீங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டீவான ஆளா? அப்படியானால் கண்டிப்பாக கபி லேமை உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சமீபத்திய சோஷியல் மீடியா வைரல் நம்ம ஆளுதான். இந்தியாவில் டிக் டாக் இல்லை என்றாலும் டிக் டாக் மூலம் பிரபலமான கபி லேம் இன்ஸ்டா, ட்விட்டர், பேஸ்புக் என எதோ ஒரு வழியில் நம்மிடம் வந்து சேர்ந்துவிட்டார். வந்தவரை சும்மா விடுவார்களா நம்ம ஊர் மீம் கிரியேட்டர்ஸ்? வழக்கம்போல அவரை பேவரைட் மீம் டெம்பிளேட்டாக ஆக்கி ரகளை கட்டி வருகிறார்கள். இப்படி உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கபிலேம் 2k கிட்.
2000ம் ஆண்டு பிறந்த குழந்தை தான் இன்று இன்ஸ்டாவில் போய் அதன் ஓனர் மார்க்கையே கலாய்த்துக்கொண்டு இருக்கிறது. ஆமாம். அந்தக்கதையை பின்னால் சொல்கிறோம். முதலில் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன கபிலேம் கதையை பார்ப்போம். டிக்டாக்கில் மற்றவர்கள் போடும் வீடியோவுக்கு பதில் வீடியோவை போட்டு பிரபலமானார் கபி. எளிதாக செய்து முடிக்கும் வேலையை சிலர் டிக்டாக்கில் அறிவுப்பூர்வமாக நினைத்து செய்துகாட்டி வீடியோ போடுவார்கள். அது முட்டாள்தனமாக இருக்கும். அதனை கலாய்த்து ’இத செய்ய எதுக்குடா இவ்ளோ கஷ்டம்’ என சொல்லாமல் செய்துகாட்டிவிடுவார் கபி. குறிப்பாக அவரது உதட்டு ரியாக்ஷனுக்குத்தான் இங்கு ரசிகர்களே. இப்படி காமெடி கண்டண்டுகளை உள்ளே இறக்கி ஹீரோவானார். பின்பு என்ன? பேஸ்புக், இன்ஸ்டா என எல்லாப்பக்கங்களிலும் அவரை மொய்த்தனர் ரசிகர்கள்.
சர்ரென பாலோவர்ஸ் ஏற இன்று இன்ஸ்டா ஓனர் மார்க்கை விட அதிக பாலோவர்ஸை வைத்துள்ளார் இந்த 2k கிட். மார்க் பாலோவர்ஸ் 7.4 மில்லியனாக இருக்க. கபியோ 10 மில்லியனை நெருங்கிவிட்டார். சும்மா இருப்பாரா.. ’ ஒரு பாவோவர்ஸா,, இங்க பாரு என் கூட்டத்தை’ என மார்க்கையே கலாய்த்து வீடியோ போட்டார். அதுவும் இன்ஸ்டாவிலேயே. இது மார்க் பார்வைக்கு போக, அவரும் ’சூப்பர்ப்பூ’ என்பது போல கட்டை விரலை உயர்த்தி காட்டி இருக்கிறார்.
View this post on Instagram
கபி லேம் இத்தாலியைச் சேர்ந்தவர். மாடல், இஸ்ஸ்டா செலிபிரிட்டி, வீடியோ கேம் உருவாக்குபவர், யூ டியூபர் என பல பரிமாணங்களில் சுற்றிக்கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் டிக்டாக்கில் வீடியோ பதிவேற்ற கபி தன்னுடைய உதட்டு ரியாக்ஷனால் இத்தாலியில் ஃபேமஸ் ஆனார். சோஷியல் மீடியாவுக்கு ஏது எல்லை? அடுத்த சில மாதங்களில் அவர் உலக அளவில் ட்ரெண்டிங். இந்தியாவில் இப்போது தான் அவர் முகம் தெரிகிறது. டிக் டாக்கில் கபி, 25 மில்லியன் பாலோவர்களை கடந்துவிட்டார். இந்தியாவில் டிக் டாக் இருந்திருந்தால் அவருக்கு இன்னும் கூட்டம் கூடி இருக்கும். பல தளங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் கபி வருமானமும் கோடிக்கணக்கில் போய்க்கொண்டுதான் இருக்கிறது.