ISRO TeLEOS-02: சிங்கப்பூர் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. C-55 ராக்கெட்!
ISRO TeLEOS-02 : டெலியோஸ்-2 செற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. C-55 ராக்கெட் மூலம் வரும் 22- (ஏப்ரல்)ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

சிங்கபூரின் டெலியோஸ்-2 செற்கைக்கோள் (Singaporean Earth Observation satelliteTeLEOS-02)பி.எஸ்.எல்.வி. C-55 ராக்கெட் மூலம் வரும் 22- (ஏப்ரல்) ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
டெலியோஸ்-2 செற்கைக்கோள்
தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலை நிறுத்திவருகிறது. அந்த வகையில் சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி55 (Polar Satellite Launch Vehicle (PSLV) C55) மூலம் மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இயற்கை பேரிடர் கண்காணிப்பு, புவியின் ஆய்வு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த டெலியோஸ்-2 பயன்படுத்த உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது 740 கிராம் எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தடைந்தது. இந்த செயற்கைக்கோள் ஏற்கெனவே, கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெலியோஸ்-2 செயற்கைகோளில் ‘synthetic aperture radar' ஒரு மீட்டர் ரெசொலுயூசன் அளவிற்கு தரவுகளை வழங்க கூடியது என்று இஸ்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டில் டெலியோஸ்-2 செய்றகைக்கோள் ஏவப்படுவது மூன்றாவது ராக்கெட் ஆகும். மூன்று வெவ்வேறு வகையையான ராக்கெட்களில் பல செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் - 3 திட்டம்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 3 திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, இந்தாண்டுக்குள் சந்திரயான் - 3 ஏவுகணை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் சந்திரயான் -3 ஏவுகணையின் இரண்டாம் கட்டம் சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
சந்திரயான் - 3 (Chandrayaan-3)
நிலவில் தண்ணீர் இருப்பதை உறக்கச் சொன்னது சந்திராயன் விண்கலம். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் 2019 ஜூலை 22-ல் ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செப்டம்பர்,7-ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை.
இந்நிலையில், சந்திரயான் - 3 திட்டம் சந்திராயன் -2- மிஷனின் ரிப்பீட் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரயான் - 3 விண்கலத்தில் ஆர்பிட்டர் இருக்காது.
தெரிந்து கொள்க!
- ஆர்பிட்டர் என்பது விண்வெளியில் உள்ள கோள்களைச் சுற்றி வந்துகொண்டே ஆய்வு செய்யும்.
- லேண்டர்- உதாரணத்திற்கு நிலவில் பத்திரமாக தரையிறங்கி தன் ஆய்வை மேற்கொள்ளும்.
- ரோவர்- இது ஆய்வு செய்யப்பட வேண்டிய கோள்/ கிரகத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று ஆய்வு செய்யும் திறன் கொண்டது.
இந்த வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுவதன் மூலம் உருவாக்கப்பட்ட அந்நிய செலாவணி தோராயமாக 94 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 46 மில்லியன் யூரோக்கள் ஆகும் என்றார்.
ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, கொரியா குடியரசு, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி-மார்க் -III ஏவுகணைகள் மூலம் வணிக ஒப்பந்தத்தின் கீழ் இவை விண்ணில் செலுத்தப்பட்டது.





















