Instagram Update: கறார் காட்டும் இன்ஸ்டா! இப்படி செய்தால்தான் அனுமதி.. வருகிறது புதிய முறை!
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சோஷியல் மீடியா என ஒரு விதியையும் மார்க் சொல்லிவைத்துள்ளார். ஆனால் இன்ஸ்டாவில் ஸ்கூல் படிக்கும் மாணவர்கள் கூட பல வகையான கணக்குகளை வைத்துள்ளனர்.
![Instagram Update: கறார் காட்டும் இன்ஸ்டா! இப்படி செய்தால்தான் அனுமதி.. வருகிறது புதிய முறை! Instagram testing new tools for age verification under 18 Over 18 by uploading ID Instagram Update: கறார் காட்டும் இன்ஸ்டா! இப்படி செய்தால்தான் அனுமதி.. வருகிறது புதிய முறை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/2bcfe24bdcff004890bf7ac7a7d11263_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்ஸ்டா..
பொழுதுபோக்கிற்காகவும் வருமான நோக்கத்திற்காகவும் திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பது இன்ஸ்டாகிராம் . பேஸ்புக் ஓனர் மார்க் நிர்வகித்துவரும் மற்றொரு சோஷியல் மீடியாதான் இன்ஸ்டா. புகைப்படங்கள், வீடியோ ரீல்ஸ் என இன்ஸ்டாவும் இளசுகளின் பொழுதுபோக்கு இடமாக உள்ளது. இதில் உள்ள ரீல்ஸ் வசதியை பயன்படுத்தி பலரும் பாடல்களுக்கு நடனமாடுவது , நடிப்பு திறமையை வெளிப்படுத்துவது என அசத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அத்தகைய பயனாளர்களை ஊக்கிவிக்கும் விதமாக விரைவில் இன்ஸ்டாகிராம் புதிய வசதிகளை கொடுத்து வருகிறது. இது ஒருபுறமிருந்தாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சோஷியல் மீடியா என ஒரு விதியையும் மார்க் சொல்லிவைத்துள்ளார். ஆனால் இன்ஸ்டாவில் ஸ்கூல் படிக்கும் மாணவர்கள் கூட பல வகையான கணக்குகளை வைத்துள்ளனர்.
முகத்தை ஸ்கேன் செய்யும்..
தற்போது உள்ள கட்டுப்பாடு என்பது மிகவும் எளிதாக தாண்டிச்செல்லும் வேலியாகவே உள்ளது. உங்களுக்கு 18 வயதா என்பதை எண்ணாக குறிக்கும் வகையில் இருப்பதால் பலரும் தங்களது பிறந்த ஆண்டை எடிட் செய்து பதிவிட்டு விடுகின்றனர். அடையாள அட்டையைக் கேட்டாலும் அசால்டாக அதனையும் மாற்றி மாற்றிக்கொடுத்து இன்ஸ்டாவை குழப்பி விடுகின்றனர். என்ன செய்வதென்று யோசித்த இன்ஸ்டா தற்போது பாதுகாப்பை பலப்படுத்தவுள்ளது. அதாவது 18 வயதானவர்களா என்பதை சரியாக கணக்கிட்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஆன்லைனின் வயதை கணிக்கும் விதமாக முகத்தை ஸ்கேன் செய்து அதன்மூலம் வயதைக் கணக்கிடும் புதிய வசதியை விரைவில் இன்ஸ்டா கொண்டு வரவுள்ளது.
அதேபோல் இன்ஸ்டா மியூச்சுவலாக உள்ள 3 நண்பர்களை செலக்ட் செய்யக் கூறும். அந்த நண்பர்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதேபோல செல்பி வீடியோ அல்லது புகைப்படத்தை இன்ஸ்டா அனுப்பக்கூறும், வீடியோவில் உள்ள முகத்தை ஸ்கேன் செய்து அந்த நபரின் வயதை கிட்டத்தட்ட கணித்து அனுமதி வழங்கும். இதன்மூலம் சிறுவர்கள் நிச்சயம் இன்ஸ்டாவில் வரமுடியாது எனக் கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள புதிய வசதிகள் :
ரீல்ஸ் நீளம் :
இன்ஸ்டாகிராம் இப்போது ரீல்ஸின் நீளத்தை 90 வினாடிகள் வரை நீட்டிப்பதாகக் கூறியுள்ளது. "உங்களைப் பற்றி அதிகம் பகிர உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும், கூடுதல் திரைக்குப் பின்னால் உள்ள கிளிப்களை படமாக்குங்கள்” என தனது பதிவில் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
ஆடியோ :
இன்ஸ்டா ரீல்ஸ் செய்பவர்கள் முன்னதாக வேறு ஒருவரின் ஆடியோவை மட்டுமே பயன்படுத்த முடிந்த நிலையில், தற்போது சொந்த குரலையோ அல்லது வீடியோவில் உள்ள ஆடியோவை பயன்படுத்தும் வசதியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதற்காக import audio என்னும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறும் பொழுது “உங்கள் கேமரா ரோலில் குறைந்தது ஐந்து வினாடிகள் நீளமுள்ள எந்த வீடியோவிலிருந்தும் ஆடியோ அம்சத்தை பயன்படுத்தலாம்“ என தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமிலும் யூடியூப் மற்றும் சில வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களை போலவே பயனாளர்கள் பணம் ஈட்டும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)