Instagram: எல்லாமே அசத்தல்! இன்ஸ்டாவில் விரைவில் அறிமுகமாகும் புத்தம்புது வசதிகள்!!
இன்ஸ்டாகிராம் தளத்தில் விரைவில் சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உலகம் முழுவதும் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் மிகவும் முக்கியமான ஒன்று இன்ஸ்டாகிராம். மேட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் 5 புதிய அம்சங்களை விரைவில் இன்ஸ்டாகிராமில் இடம்பெற உள்ளது.
இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலில் எக்ஸ்குளூசிவ் என்ற டேப் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் பேயிட் ப்ரோமோஷன் செய்ய வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த வகையான வசதி தொழில்முறை கணக்குகளுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக இன்ஸ்டாகிராமில் வரும் ஸ்டோரிஸ்களுக்கு இனி இமேஜ் மூலம் பதில் அளிக்கும் முறையும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்களுக்கு மெசேஜ், ஜிஃப் ஆகியவை அளித்து பதிலளிக்க முடியும். விரைவில் இமேஜ் அனுப்பியும் அதற்கு பதிலளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேலும் இன்ஸ்டா ஸ்டோரிஸ்களுக்கு உங்களுடைய வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதியும் விரைவில் வர உள்ளது. அதாவது இன்ஸ்டா ஸ்டோரிஸிற்கு பதிலளிக்கும் போது வாய்ஸ் மெசேஜ் அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக வாய்ஸ் சேட் டேப் விரைவில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர இன்ஸ்டாகிராம் போஸ்ட்களை இனிமேல் க்யூஆர் கோட் முறையில் பகிரவும் இன்ஸ்டாகிராம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த முறை ஷேர் டூ என்ற ஆப்ஷனில் இடம்பெற உள்ளது. இவற்றுடன் இன்ஸ்டா ஸ்டோரிஸ்களுக்கு மறையும் வகையில் ஒரு புதிய வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்தப் புதிய வசதியில் மூலம் இன்ஸ்டா ஸ்டோரிஸ்களுக்கு நீங்கள் அனுப்பிய ரிப்ளேவை அந்த நபர் பார்த்தவுடன் மறைந்துவிடும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தப் புதிய வசதிகள் அனைத்தும் விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதிகள் தொடர்பான தகவல் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் மத்தியில்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புதிய வசதிகள் எப்போது வரும் என்று அவர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க:தட்டினால் போதும்.. பணம் செலுத்த Google Pay-இன் புதிய ஆப்ஷன் வந்தாச்சு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்