Google Pay New : தட்டினால் போதும்.. பணம் செலுத்த Google Pay-இன் புதிய ஆப்ஷன் வந்தாச்சு..
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளது கூகுள் பே நிறுவனத்தின் டேப் டூ பே முறை.
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளது கூகுள் பே நிறுவனத்தின் டேப் டூ பே முறை. நாம் பணப் பரிவர்த்தனைகளுக்காக முன்னர் ஸ்வைப் பண்ணோம், அப்புறம் ஜிபே பண்ணோம் இப்போ ஜி பேவும் அடுத்தக் கட்டத்துக்கு போய்விட்டது. அந்த வரிசையில் கூகுள் பே, டேப் டூ பே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. யுபிஐ அடிப்படையிலான பேமென்ட்டுகளுக்கு இந்த முறை பயன்படும்.
ஏற்கெனவே சில வங்கிகள் தனது டெபிட், கிரெடிட் கார்டுகளில் இந்த டேப் டூ பே முறையை அனுமதித்துள்ளது. ஆனால் முதன்முறையாக கூகுள் பே இதை ஃபோன் மூலம் செயல்படுத்த வழிவகை செய்துள்ளது. டேப் டூ பே முறை மூலம் கூகுள் பே செய்யும் வசதியை பைன் லேப்ஸ் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
எப்படி பே செய்வது..
இந்த டேப் டூ பே முறையைப் பயனபடுத்தி பேமென்ட் செய்ய நாம், கடையில் உள்ள பிஓஎஸ் இயந்திரம் (POS terminal) மீது தட்டிவிட்டு பின்னர் யுபிஐ பின்னை பயன்படுத்தினால் போதும் பணம் செலுத்தப்பட்டுவிடும். கியூஆர் கோட் ஸ்கேன் செய்து பின்னர் யுபிஐ பின்னை இரண்டு முறை பயன்படுத்தி பணம் செலுத்துவதை இந்தமுறை இன்னும் வேகமாக இருக்கும் எனக் கூறுகிறது புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் பே நிறுவனம்.
இந்த சேவையை முதலில் ரிலையன்ஸ் ரீட்டெய்லுடன் இணைந்து செயல்படுத்தத் தொடங்கியுள்ள கூகுள் பே, இனி இதை படிப்படியாக ஃப்யூச்சர் ரீட்டய்ல், ஸ்டார் பக்ஸ் போன்ற அமைப்புகளுடன் செய்யவிருக்கிறது.
இது குறித்து கூகுள் பே நிறுவனம் மற்றும் நெக்ஸ்ட் பில்லியன் யூஸர் இன்சியேட்டிவ்ஸ், கூகுள் அபாக்கின் பிசினஸ் ஹெட் சஜீத் சிவானந்தன் கூறியதாவது:
இந்தியாவில் ஃபின் டெக் ( நிதி தொழில்நுட்ப) வளர்ச்சி என்பது அபரிமிதமாக உள்ளது. முதலில் யுபிஐ கொண்டு வரப்பட்டது. அதில் இன்னும் சில மேம்பாட்டுகளை செய்து இப்போது பணப் பரிவர்த்தனை நேரத்தை இன்னும் குறைவாக்கி கிட்டத்தட்ட ஜீரோ என்ற நிலைக்குக் கொண்டு வரும் முயற்சி தான் டேப் டூ பே முறை.
இந்த முறை அதிக மக்கள் கூடும் ரீட்டெய்ல் நிறுவனங்களுக்கு பில்லிங் வேலையில் மிகவும் உதவிகரமாக இருக்கும். நீண்ட வரிசையை எளிதில் சமாளிக்க முடியும். இதற்காக நாங்கள் பைன் லேப்ஸ் நிறுவனத்துடன் கைகோத்துள்ளோம். அவர்களுடன் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக டேப் டூ பே முறையை செயல்படுத்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பெருமையுடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.