Instagram Update | இனி இன்ஸ்டாகிராமில் YouTube லிங்கையும் இணைக்கலாம்! - எப்படி?
பயனாளர்களின் இந்த மனக்குறையைப் போக்க தற்போது தனது ஸ்டோரியில் லிங்கை இணைக்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது இன்ஸ்டாகிராம்.
கொரோனா பேரிடர் காலத்தில் மற்ற சோஷியல் மீடியாக்களை விட இன்ஸ்டாகிராம் உபயோகித்தவர்கள் அதிகம். ஃபேஸ்புக் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 40 சதவிகிதம் வரை அதிகரித்திருந்தது. என்னதான் இதனை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமானாலும் அதில் சில குறைபாடுகள் பயனாளர்களுக்கு இடையூறாக இருந்தது என்றே சொல்லலாம். அதில் முக்கியமாக இன்ஸ்டாகிராமில் உங்கள் ப்ரொபைல் தவிர வேறு எந்த இடத்திலும் லிங்க் உபயோகிக்க முடியாது. ஆனால் பயனாளர்களின் இந்த மனக்குறையைப் போக்க தற்போது தனது ஸ்டோரியில் லிங்கை இணைக்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது இன்ஸ்டாகிராம்.
இன்ஸ்டாகிராமில் லிங்க்கை இணைப்பது எப்படி?
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் லிங்கை இணைக்க விரும்புபவர்கள் ஸ்டிக்கர் ஆப்ஷனில் இருக்கும் லிங்க் என்கிற எமோஜியைப் பயன்படுத்தி அதில் லிங்கை இணைக்கலாம். உங்களது ஸ்டோரியில் எங்கு வேண்டுமானாலும் இந்த லிங்க் இணைப்பதைப் பயன்படுத்தலாம். இணைக்கப்பட்ட லிங்க்கை பப்ளிஷ் செய்தபின் அதனை க்ளிக் செய்பவர்கள் நேரடியாக அந்த தளத்துக்குச் செல்லலாம்.
Whether it’s sharing info on social justice or supporting a local biz, everyone should be able to share what matters to them. 📢❤️
— Instagram (@instagram) October 27, 2021
We are excited to globally roll out Link Sticker 🔗, which allows you to share links in your story... no matter how big or small your account is. pic.twitter.com/x5QFClbpaT
முன்னதாக, கணினியின் மூலம் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வசதியைப் பரிசோதித்து வருகிறது இன்ஸ்டாகிராம் நிறுவனம். இதன்மூலம், கணினியில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் பேஸ்புக் தளத்தைப் போல, இன்ஸ்டாகிராம் தளத்திலும் படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவிட முடியும். அக்டோபர் 21 வெளியிடப்பட்ட அப்டேட்களின் மூலம், உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மக்கள் இந்தப் புதிய அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
இந்தப் புதிய அம்சத்தின் மூலம், வர்த்தகம், மாடலிங் முதலானவற்றை மேற்கொள்ள இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்துபவர்கள் ஃபோன் மட்டும் இல்லாமல், தங்கள் விலை உயர்ந்த கேமராக்களைப் பயன்படுத்தி எடுத்த ஃபோட்டோக்களையும் பதிவிட முடியும். மேலும், ஸ்மார்ட்ஃபோன்களின் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோரை மையப்படுத்தியும் பல்வேறு புதிய அம்சங்களை இந்த அப்டேட்டில் வெளியிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.`Collabs' என்ற புதிய பரிசோதனை முயற்சியின் மூலம் இரண்டு நபர்கள் இணைந்து போஸ்ட், ரீல்ஸ் ஆகியவற்றைப் பதிவிட முடியும். இதற்காகப் பயனாளர்கள் தங்கள் tagging ஆப்ஷனின் போது, பிறரை invite செய்தால் அவர்களுடன் இணைந்து போஸ்ட்களைப் பதிவிட முடியும்.
அவ்வாறு பதிவிட்ட இரு பயனாளர்களின் ஃபாலோவர்களும் அந்தப் போஸ்டைப் பார்வையிட முடியும். மேலும், அதனால் வியூஸ் அதிகமாகக் கூடலாம். லைக்ஸ், கமெண்ட்ஸ் ஆகியவற்றையும் பெறலாம். பெரிய சூப்பர்ஸ்டார்கள் முதல் ஸ்பான்சர் செய்யப்படும் விளம்பரங்கள் போஸ்ட்கள் வரை இந்தப் புதிய அம்சம் பயனுள்ளதாக அமையும். இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த சிறப்பம்சத்தைப் புதிது எனக் கூறினாலும், வெகு சில பயனாளர்கள் இதனைப் பயன்படுத்தி வந்ததை நாம் பார்க்க முடியும். கடந்த ஜூலை மாதமே வெகு சிலருக்கு மட்டும் இந்தச் சிறப்பம்சம் வழங்கப்பட்டது. வெளியிட்ட போது, சிலருக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட இந்த சிறப்பம்சம், உலகம் முழுவதும் உள்ள பயனாளர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.